பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 225


இல்லை- இல்லவேயில்லை. இலக்குமணா! நீ இராம னுடன் காடேகி அவனுக்குத் துணையாய் வேண்டுவன வற்றையெல்லாம் செய்து கொடு- தம்பி என்ற முறையில் நீ பழகலாகாது- தொண்டன் என்ற முறையிலேயே பழக வேண்டும்- இராமன் ஒரு துன்பமும் இன்றி நாடு திரும்பினால் நீயும் அவனுடன் வா! இல்லையேல் அவன், முடிவதற்கு முன் நீ முடிந்துவிடு'- என்றல்லவா சுமித்திரை சொன்னாள். உலகில் எத்தனைத் தாய்மார்கள் இவ்வாறு சொல்வர். சுமித்திரை சொன்னாளே! அதனால்தான் அவள், 'அறம் தானே' என அறத்தின் வடிவமாகப் புகழப்பட்டுள்ளாள்.

தயரதன் மெய்யை (சத்தியத்தை) நிலை நிறுத்தித் தான் இறுந்து விட்டானாம். இங்கே, பெருந்தலைச் சாத்தனார் பாடியுள்ள,

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே

(165- 1, 2)


என்னும் புறநானூற்றுப் பாடலும், கார் நாற்பதில் உள்ள,

மண்ணியல் ஞாலத்து மன்னு புகழ் வேண்டிப்
பெண்ணியல் நல்லாய் பிரிந்தார்

(8)

என்னும் பாடல் பகுதியும், தஞ்சை வாணன் கோவையில் உள்ள, மன்னா உலகத்து மன்னிய சீர்த் தஞ்சை வாணன் (21)

என்னும் பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. அடுத்து, இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் என்னும் தொடர் பொருள் பொதிந்தது. இராமனுக்குத் தம்பி இல்லை என்று யாரும் சொல்லிஅ. ஆ.-15