பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 - சுந்தர சண்முகனார்


இதனால்தான், மாணிக்கவாசகர், 'யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்- இறப்பதனுக்கு என் கடவேன்' எனப் பிறப்பு தொடர்பாக அஞ்சவில்லை- இறக்கும்போது என்னபாடு படுவேனோ- என நோய் நொடியுடன் கிடந்து இறப்பதற்கு அஞ்சியுள்ளார். பரதனை நோக்கினால், தாயின் குடலில் கிடந்து தேய்ந்ததாக அதாவது பிறந்ததற்கும் வருந்துவதாகக் கூறியுள்ளான். கைகேயியைப் பற்றி (மூன்றரை அடிகளில்) கூறியும், அவள் இன்னாள் என்று உனக்குத் தெரியவில்லையென்றால், குகனே! யானே கூறுகின்றேன்- அவள்தான் என்னைப் பெற்றவள் என்று தெரிவிக்கிறான்.

திருவடி சூட்டு படலம்

தந்தை தயரதன் இறந்து விட்டான் என்பதைக் கேட்டதும் இராமன் புலம்புகிறான்:

நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிதியே
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரோ மற்று என்றான்

(60).

இந்தப் பாடலுக்கு விளக்கம் வேண்டா. படித்துப் படிதது அழுகைச் சுவையை (அவலச் சுவையை) நுகரலாம்.

உயிர்க்கு இரங்கலா?

தயரதன் இறந்தமையை அறிந்து புலம்பிய இராம அதகு வசிட்டன் ஆறுதல் கூறுகின்றான்: ஐம்பொறிகள், ஐம்புலன்கள் ஆகியவற்றிற்கு முதற்பொருளாயுள்ள மண்