பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 - சுந்தர சண்முகனார்



சுமந்திரன் இராமனிடம் வாய் பொத்தி நின்றது போலவே, இராமனும் கைகேயினிடம் ஒரு கையால் வாய் பொத்திக் கொண்டும் மற்றொரு கையால் நீண்டு தொங்கும் உடையைச் சிறிது மடக்கிக் கொண்டும் நின்றானாம்.

சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டுகின்றான்

(108)

என்பது பாடல் பகுதி.

நகர் நீங்கு படலம்

கையால் தைவரல்

சோர்ந்து கிடப்பவரை, அவருக்கு நெருக்கமானவர் வந்து உடம்பையும் முகத்தையும் இரு கால்களையும் கைகளால் தடவிக் கொடுத்தல் சோர்வை நீக்க முயலும் ஒரு செயலாகும். சோர்ந்து கிடந்த தயரதனைக் கோசலை இவ்வாறு தடவிக் கொடுத்தாளாம்.

என்றென்று அரசன் மெய்யும் இருதாள் இணையும் முகனும்
தன்தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள வண்திண் சிலைநம் குரிசில் வருமே வருமே என்றான்

< (70)

என்பது பாடல். மகனது பிரிவால் ஒன்றும் புரியாமல் மயங்கிக் கிடக்கும் தயரதன், கோசலையை நோக்கி, நம் மகன் இராமன் மீண்டு வருவானா- வருவானா என்று கேட்டானாம். இவ்வாறு, துயரத்தின்போது குழந்தை நிலையை அடைந்து விடுதல் உலக இயல்பு அன்றோ?

கைவிடுவேம்

தலைவனே தவறு செய்தால், கீழிருப்பவர்கள், அந்த ஆளே அப்படிச் செய்யும் போது நமக்கு மட்டும்