பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 41

என்னாடா- அடித்துத் தள்ளுங்கடா- என்று பேசிக் கொள்வது உலகியலில் சிலரிடையே உண்டு. இதுபோல், அயோத்தி மக்கள், தயரதனே அறத்தைக் கைவிட்டு இராமனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டான். இனி நாமும் அறத்தைக் கைவிடுவோம்- என்று பேசிக் கொள்கிறார்களாம்.

ஆஆ. அரசன் அருள் இலனே ஆம் என்பார்;
காவா அறத்தை இனிக் கைவிடுவேம் யாம் என்பார்

(95)

என்பது பாடல் பகுதி.

காக்குநர் காமின்

ஓரிடத்தில் ஒரு கொடுமை நிகழின், அதைப் பொறுக்க முடியாத ஒருவர், யான் இப்படி யெல்லாம் என்னென்னவோ செய்யப் போகிறேன்; என்னைத் தடுப்பவர் தடுக்கட்டும் பார்க்கலாம்- என்று கூறுவது உலகியலில் உண்டு. இராமன் முடி இழந்ததைப் பொறாத இலக்குமணன், யான் எதிர்ப்பவர் அனைவரையும் கொன்று வென்று இராமனுக்கு முடி சூட்டுவேன். என் செயல் நிகழாமல் காப்பவர் காக்கட்டும் பார்க்கலாம்- என்று முழங்கு கிறான். பாடல்:

புவிப்பாவை பரம்கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்து அவர் ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும், இன்றே என் கோவினைக் கொற்ற மெளலி
கவிப்பானும் கின்றேன் இது காக்குநர் காமின் என்றான்

(117)

வாய் தந்தன

சீற்றம் கொண்ட ஒருவன் கண்டபடி ஏதாவது பேசினால், மற்றவர், நீ வாயில் வந்தவை யெல்லாம் பேசலாமா என்று கண்டிப்பது உலகியல். இலக்குமணனின் சீற்ற உரையைக் கேட்ட இராமன்,