பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 - சுந்தர சண்முகனார்

ஐய! நின் தன் வாய்தந்தன கூறுதியோ? (131)

என்றான்.

நெடிது நிற்கின்றான்

நீடு காடு வர வேண்டா என்று தடுத்த இராமனை நோக்கி நான் வரத்தான் போகிறேன் என்று மன்றாடிய இலக்குமணனை அவ் இராமன் மறுத்துக் கூற முடிய வில்லை; இலக்குமணனது முகத்தை நோக்கி நோக்கிக் கண்களினின்றும் நீரைக் கொட்டிச் செய்வதறியாது திகைத்து அப்படியே நின்றுவிட்டான். இது ஒருவகை உலகியல். பாடல்:

உரைத்தபின் இராமன் ஒன்று உரைக்க உன்னிலன் வரைத் தடங் தோளினான் வதனம் நோக்கினான் விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்கநீர் நிரைத்து இடை இடைவிழ நெடிது நிற்கின்றான்

(156)

மறந்தனர்- அறிந்திலர்

நிலைமையில் குழப்பமான துன்பச் சூழ்நிலை ஏற்பட்டபோது, தாய்மார்கள் குழந்தைகளையும் மறந்து கவனிக்காமல் துன்பத்தில் தோய்ந்து மூழ்கியிருப்பதும், தாய்மார்கள் போன இடம் அறியாமல் குழந்தைகள் திகைத்து அழுவதும் உலகியல். இராமனுக்கு முடியில்லை என்றதை அறிந்ததும், மாதர்கள் மக்களை மறந்தனராம்; பிள்ளைகள் தாயர் இருக்குமிடம் அறியாமல் திகைத்தனராம். பாடல் பகுதி:

மக்களை மறந்தனர் மாதர் தாயரைப்
புக்க இடம் அறிந்திலர் புதல்வர்...

(196}

முன்- பின் செல்லல்

கணவனும் மனைவியும் தெருவில் செல்லும் போதோ அல்லது வேறு எங்கேனும் நடந்து செல்லும் போதோ ஆடவனாகிய கணவன் முன் செல்வதும், பெண்ணாகிய