பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 - சுந்தர சண்முகனார்

கையைப் பிடித்துக் கொண்டு செல்லவில்லை. காதல் மிகுதியால் அவ்வாறு செல்வர்.)

இனிக் கம்பனிடம் வருவோம்: இராமனுக்கு முன்னே காவலாக இலக்குமணன் செல்ல, இராமனுக்குப் பின்னே சீதை சென்றாளாம். அப்படியென்றால், சீதைக்கு முன்னே இராமன் செல்ல, இராமனுக்குப் பின்னே சீதை சென்றாள் என்பது கருத்து. இது முறையான உலகியல் அமைப்பு. இந்தக் காட்சியைத் தெருவில் கண்ட ஊரார் மிகவும் வருந்தினராம். பாடல்:

சீரை சுற்றித் திருமகள் பின்செல
முரி விற்கை இளையவன் முன்செல
காரை ஒத்தவன் போம்படி கண்டஅவ்
வூரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?

(230)

சுமந்திரன் மீட்சிப் படலம்

முலை வருடலும் அங்கை அணையும்

இராமனை நகருக்கு அழைத்துவரச் சுமந்திரனுடன் காட்டிற்குச் சென்ற மக்கள் வழியில் ஒர் இரவில் ஒரு சோலையில் தங்கித் தூங்கினர். இளைய சில பெண்டிர், தம் முலையைக் குழந்தை தடவிக் கண்டு சுவைத்துக் கொண்டிருக்கத் தாம் தூங்கிக் கொண்டிருந்தார்களாம்.

சிலர் கையையே தலையணையாக மடித்து வைத்துக் கொண்டு உறங்கினராம். இவையெல்லாம் உலகியல் அன்றோ? பாடல் பகுதிகள்:

மகவு முலை வருட இளமகளிர்கள் துயின்றார் (15)

அங்கை அணையில் பொலிவழுங்க முகமெல்லாம் பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார் (16)

முலை வருடல் = முலையைத் தடவுதல். கம்பர், கையாகிய அணையில் துயின்றார் எனக் கூறவில்லை. "அங்கை அணை' என்றே கூறியுள்ளார். அங்கை