பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 () சுந்தர சண்முகனார்

அயோத்திக்குச் சென்றுவிட்டான் என எண்ணி, இப்போதுதான் உயிர் வந்தவர்களானார்களாம். முகிலும் கடலும் ஒருசேர ஒலித்தாற்போல ஆரவாரித்தார்களாம். பாடல்:

தேரின் சுவடு நோக்குவார்; திருமா நகரின் மிசைத் திறிய
ஊரும் திகிரிக் குறி கண்டார்; உவந்தார் எல்லாம் உயிர் வந்தார்;
ஆரும் அஞ்சல் ஐயன்போய் அயோத்தி அடைந்தான் என அசனிக்
காரும் கடலும் ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிது
(ஆர்த்தார்

(33)

கங்கைப் படலம்

மனையின் நீங்கிய மக்கள்

பிள்ளை, பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஒடிவிடின், பெற்றோர் நாடோறும் பிள்ளையை நினைந்து நினைந்து காணாது தேடிக் கொண் டிருப்பார்கள். அந்தப் பிள்ளை திரும்ப வந்துவிடின் அன்போடு எதிர்கொண்டு அணைத்து மகிழ்வர். இது போலவே, இராமனைத் தம் பிள்ளைபோல் நினைத்திருந்த முனிவர்கள், காட்டில் இராமனைக் கண்டதும் வரவேற்றுத் தத்தம் தவப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனராம். பாடல்:

மனையின் நீங்கிய மக்களை வைகலும்
கினையும் நெஞ்சினர் கண்டிலர் கேடுவார் அனையர் வந்துற ஆண்டெதிர்ந் தார்கள் போல்
இனிய மாதவப் பள்ளி கொண் டெய்தினார்

(13)

குகப் படலம்

பெரியோரைக் காணும் முறை

பெரியோரைக் காணச் செல்பவர்கள் தலைப் பாகையை நீக்கி, தோளின்மேல் உள்ள துண்டை