பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 49

பொத்திக் கொண்டனவாம். கேட்கக் கூடாத சொற் களைக் கேட்க நேர்ந்தபோது செவிகளைக் கையால் பொத்திக் கொள்வது இயற்கைதானே! பாடல் பகுதி:-

சூடின மலர்க்கரம் சொல்லின் முன் செவி கூடின... (66)

உயிரோடு தின்றல்

ஒருவர் செயற்கையாக இறந்துவிடின், அவரது இறப் பிற்குக் காரணமாயிருந்தவரை நோக்கி, மற்றவர், அவரை உயிரோடு தின்று விட்டாயே- என்று கூறுதல் ஒருவகை உலக இயற்கை. தம்பியர் இருவர் இறந்து போக, அவர்களின் தமையன், நான் என் இரண்டு தம்பிகளையும் உயிரோடு தின்று விட்டேன் என்று கூறியதை யும், குழந்தையை இழந்த தாய் ஒருத்தி, நான் என் குழந்தையைத் தின்று விட்டேன் என்று கூறியதையும் யான் (சுந்தர சண்முகம்) நேரில் கேட்டுள்ளேன். இங்கே, பரதன் தாயை நோக்கி, உன் வாயாலேயே தந்தை தயரதரின் உயிரைத் தின்று விட்டாயே என்று கூறினான்.

ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன்பழி கொண்டீர்...

(77)

என்பது பாடல் பகுதி. இங்கே வாயால்' என்னும் சொல்லின் நயம் கவனிக்கத் தக்கது. கைகேயி வாயால் வரம் கேட்டுத்தானே கொன்றாள் அல்லவா? மற்றும், தின்பது வாய்தானே என்னும் கருத்தும் இதிலே அடங்கியுள்ளது.

நாவில் நீர் வரல்

ஒருவர் சிறந்த உணவு உண்பதைப் பார்க்கும் மற்றொருவர்க்கு நாக்கில் நீர் ஊறும் என்பதாகச் சொல்வதுண்டு. இங்கே, பரதன், கோசலையிடம் சில சூளுரை கூறுகிறான்: நான் உண்மையில் இராமனை வஞ்சித்தேன் எனில், நறுமணம் மிக்க உணவைப் பிறர்க்கும் தராமல் அவர்களின் நாக்கில் நீர் ஊறும்படி அ. ஆ.-4