பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. சிறப்புறு செய்தி முத்துகள் கம்பர் தமது இராமாயண நூலில் சிறப்பான முத்தான செய்திகள் பல தெரிவித்துள்ளார். அவற்றுள், அயோத்தியா காண்டத்தில் உள்ள சிறப்புறு செய்திகள் சில காணலாம்: மந்திரப் படலம் கலையின் குப்பை அமைச்சர்கள் வழிவழியாக அமைச்சர் மரபைச் சேர்ந்தவர்கள்; கலையின் குப்பையும் கேள்விச் செல்வமும் உடையவர்கள்- எனக் கம்பர் புகழ்ந்துள்ளார். பாடல் பகுதி: குல முதல் தொன்மையும் கலையின் குப்பையும் பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார் (5) அமைச்சர்கள் கல்வி- கலை மிக்கவர்கள் என்பதைக் 'கலையின் குப்பை எய்தினர்' என்னும் தொடரால் சுட்டிக் காட்டியுள்ளார். ஈண்டு குப்பை என்றால் என்ன? குப்பையின் வரலாறு கண்ட இடங்களில் கண்டபடிக் குவிக்கப்படும் கழிவுப் பொருள்களின் தொகுதி, தொடக்கத்தில் குப்பை எனப்