பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 57

அண்ணல் ஆண்டிருந்தான் அழகு அரு நறவெனத் தன்
கண்ணும் உள்ளமும் வண்டெனக் களிப்புறக் கண்டான்

(49)

கண் களிப்புறக் கண்டதாகக் கூறுதல் மரபு. இங்கே, கண்ணோடு உள்ளமும் களிப்புறக் கண்டதாகக் கம்பர் கூறியுள்ளார். இதில் உள்ள சிறப்பாவது:

கண் கண்டாலும் உள்ளம் வேறொன்றை நினைத்துக் கொண்டிருக்குமாயின் களிப்பு தோன்றாது. நாம் ஒரு வரைப் பார்க்கச் செல்கிறோம்; வழியில் அவரே வரினும், மனம் வேறு எதையாவது எண்ணிக்கொண்டிருந்தால் நாம் அவரைக் கவனிக்க முடியாது. அவராகப் பார்த்துப் பேச்சு கொடுப்பின், ஒ! நான் உங்களைப் பார்க்கத்தான் செல்கிறேன்; நன்றாகக் கவனிக்கவில்லை' என்று அசடு' வழிகிறோம்.

எனவே, உள்ளமும் ஒன்றினால்தான் கண் கண்டு களிப்புற முடியும். பொருள்களைப் பார்ப்பது கண்கள் அல்ல. மனம் என்பது மூளையின் இயக்கமே. மூளையே கண் என்னும் பலகணி (சன்னல்) வழியாகப் பொருள்களைப் பார்க்கிறது. கண்கள் வாயிலே யாகும். இங்கே, "பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் குறள் (6) பாவில், கண் உட்பட்ட ஐம்பொறிகளும் வாயில்' எனக் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளுமே, மனமாகிய மூளையின் வாயில்களேயாகும். இந்த ஐந்து பொறிகளையும் அறிவுக் கோட்டையின் ஐந்து வாயில்கள்' (Five Gates of Knowledge) உளவியலார் கூறுவதும் ஈண்டு எண்ணத் தக்கது.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

கன்றுடைப் பசு

இராமனுக்கு முடிசூட்டு என்பதை யறிந்ததும், தாய். கோசலை மகிழ்ந்து தவசியர்க்கு கன்றுடன் கூடிய பசுவின் கடலைக் கொடுத்தாளாம். பாடல் பகுதி: