பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 61

துாம கேது

தூம கேது என்பது ஒருவகை வால் விண்மீன் (வால் நட்சத்திரம்- Comet) தூமம்=புகை, கேது - கொடி. எனவே, இதனைத் தமிழ் நூல்கள் புகைக் கொடி’ என்றும் கூறும் சிலப்பதிகாரத்திலிருந்து ஒர் அகச் சான்று காண்போம்:

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்...

(10-102, 103)

புகை என்பது வெப்பத் தோற்றம். கொடி என்பது வால். விண் வீழ் கொள்ளியாகிய இந்தத் தூமகேது தோன்றினால் மண்ணுலகம் (பூமி) கெடுதியை எதிர் நோக்க வேண்டியிருக்குமாம்.

பூமிக்குத் தொல்லை தரும் தூமகேதுவைப் போன்ற பெண்டிர், சிலர் மேல் கொள்ளும் காமம் இல்லையெனில் கெடுதியில்லை எனக் கூறுகிறது கம்பர் பாடல்:

தூம கேது புவிக் கெனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை யெனில் கடுங் கேடெனும்
காமம் இல்லை நரகமும் இல்லையே

(29) என்பது பாடல். ஒருவர் மற்றொருவரை மட்டம்தட்டிப் பேசும் பொருளில், போடா துாம காது’ என்று சொன்னதை யான் இளமையில் கேட்டிருக்கிறேன். அப்போது இதன் பொருள் தெரியவில்லை. பிறகே, துரம கேது என்பதே 'துரம காது' எனக் கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது என்னும் உண்மை விளங்கிற்று.

மயில் முறைக் குலம்

இராமனுக்கு முடிசூட்டலாகாது- பரதனுக்கே பட்டம் தரவேண்டும் எனக் கூறிய கூனிமேல் கைகேயி சினம் கொண்டு கூறுகிறாள்: ஞாயிறு குலத்தில் வந்தவர்கள் உயிர் போவதெனினும் உரை மாறமாட்டார்கள்.