பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 78

படி வேண்டுகின்றார்: 'இராமா! இந்த இடம், கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் நல்லபுண்ணிய இடமாகும். அதனால் தான் நான் இவ்விடத்தை விட்டுப் பிரியாமல் இங்கேயே உள்ளேன். நீயும் இங்கேயே இருந்துவிடு' என்கிறார்.

கங்கை யாளொடு கரியவள் நாமகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலன்...

(31)

மூன்று ஆறுகள் கூடும் இடத்தைத் திரிசங்கமம் என வட மொழியிலும் முக்கூடல் எனத் தமிழிலும் கூறுவது மரபு. இந்த இடத்திற்குத் தெய்வத் தன்மை கற்பிப்பதும் உண்டு. இங்கே யமுனை கரியவள்" எனவும், சரசுவதி 'கலைமகள்' எனவும் தமிழ்ப் பெயரால் கம்பரால் குறிப் பிடப்பட்டிருப்பது சுவையாயுள்ளது.

கொன்றை வேய்ங் குழல்

இராமன் முதலிய மூவரும் காட்டில் ஆயர்கள் குழல் ஊதும் முல்லை நிலத்தையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும் கடந்து சென்று காளிந்தி ஆற்றைக் கண்டனராம்: அந்த ஆற்றங்கரையில் சிறிய மான் கன்றுகள் நீர் அருந்துமாம். ஞாயிறு அப்போது தலைக்குமேல் உச்சியை அடைந்திருந்தானாம்.

கொன்றை வேய்ங் குழல் கோவலர் முல்லையங் குறிஞ்சி
சென்று, செங்கதிர்ச் செல்வனும் நடுஉற, சிறுமான்
கன்று நீர்நுகர் காளிந்தி எனும்நதி கண்டார்

(34)

என்பது பாடல் பகுதி. இதில் உள்ள கொன்றை வேய்ங் குழல்’ என்னும் பகுதி குறிப்பிடத் தக்கது. குழலுக்குப் "புல்லாம் குழல்' என்ற பெயர் உண்டு. புல் = புறவயிரம் உடைய மூங்கில். மூங்கிலில் துளைபோட்டுச் செய்த குழல் என்னும் பொருளில் இப்பெயர் வழங்கப்படுகிறது. முதலில், மூங்கில் கழியில் வண்டு துளைத்த துளைகள் வழியாகக் காற்று புகுந்தபோது இயற்கையாக எழுந்த