பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 15

உள்ளது. ('கற்பு முல்லை' என்னும் தலைப்பில் ஒரு நூலில் ஒரு பகுதி எழுதியுள்ளேன்) சங்க இலக்கியங் களில் 'முல்லையங் கற்பு’ என்னும் தொடரைக் காணலாம். இந்த அடிப்படையுடன் அருந்ததியிடம் வருவோம்:

சிவப்பிரகாசர் தம் பிரபுலிங்க லீலை என்னும் நூலின் கைலாச கதியில், முல்லையந்தொடை அருந்ததி' (27) என்று குறிப்பிட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. அத்தகைய அருந்ததிக்கே கூட, சீதை சீலம் கற்றுக் கொடுக்கக் கூடியவள் என்று இராமன் வாயிலாகக் கம்பர் கூறி நம்மை இன்புறுத்தியுள்ளார்.

உடலுக்கு உயிர்

உலகில் உள்ள பெண்மை, (பெண்தன்மை) என்னும் உடலுக்குச் சீதை உயிர் போன்றிருக்கிறாளாம். ஒருவில் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே! (14)

என்பது பாடல் பகுதி. அதாவது, சீதை உயிராய் இருந்து உலகப் பெண்மையைக் காக்கிறாளாம். இது இராமனது விளி.

அசுணமா

அசுணத்தை வேட்டையாடுபவர்கள், முதலில் இன்னிசை எழுப்புவார்களாம். அந்த இசை இன்பத்தில் மிகவும் ஈடுபாடுடைய அசுணம் மெய்ம் மறந்து இருக்குமாம். அப்போது வெடிபோன்ற கடினமான பறை ஒசை எழுப்பினால், அதைப் பொறாமல் அசுணம் இறந்து போகுமாம். அசுணம் பறவை என்று சிலரும் விலங்கு என்று சிலரும் கூறுகின்றனர். இந்தக் குழப்பத் திற்குக் கம்பர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்:

குறிஞ்சி நில மகளிர் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இனிய குறிஞ்சிப் பண் பாடுகிறார்களாம். அதைக்