பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 - சுந்தர சண்முகனார்

பொருளைக் கேட்டிருந்த கிளி மறக்காமல் கூறுகின்றதாம். பாடல்.

மறந்திடா மணி வண்டுபடு மலர்
சிறந்த நீல மலரொடு சீர்பெற
மறந் திடாது மறைமுடி யின்பொருள்
அறைந்து பைங்கிளி முன்கை அமர்ந்திட

(கைலாச கதி-23)

என்பது பாடல். இங்கே நைடதத்தில் மணம் புரிபடலத்தில் உள்ள

கள்ளுலாம் நறிய கூந்தல் கலவியின் உரைத்த யாவும்
கிள்ளைகள் மிழற்று மாறு கேட்டிள நிலவு காலும் முள்ளெயிறு இயங்கச் செல்வி முகிழ்நகை கோட்டினாளே

(54)

என்னும் பகுதியும் ஒப்பு நோக்கத் தக்கது. இதன் கருத்தாவது: தேன் உள்ள மலர் சூடிய கூந்தலையுடைய தமயந்தி, புணர்ச்சியின்போது கணவனும் தானுமாய்ப் பேசிக்கொண்ட இன்ப உரைகளையெல்லாம் கிளிகள் சொல்லக் கேட்டு புன்முறுவல் பூத்தாள்- என்பது.

இத்தகைய பழக்கமுடைய கிளிகள் பரதன் வந்த போது அயோத்தியில் ஒன்றும் பேசவில்லையாம். தூதாக அனுப்பிய அன்னமும் போய்ச் செய்தி சொல்லவில்லையாம்.

வர்த்தமானன் பதிப்பகப் பதிப்பில் இப்பாடலின் ஒரு பகுதி வேறாயுள்ளது:

ஒது கின்றில கிள்ளையும்; ஓதியர் தூது சென்றில வந்தில தோழர்பால்...

என்பது இப்பதிப்பின் பாடல். இங்கே, ஒதியர்' என் பதற்குக் கூந்தலழகு உடைய பெண்கள் எனவும், தூது சென்றில’ என்பதற்குத் தூது போகவேயில்லை எனவும், 'வந்தில’ என்பதற்குத் தூது போனவை திரும்பி வரவில்லை எனவும், 'தோழர் பால்' என்பதற்குக்