பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 81

காதலரிடம்- தலைவரிடம் எனவும் பொருள் கொள்ளல் வேண்டும்.

நெய்யோடு உண்ணல்

இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தன் தாய் கைகேயியைப் பரதன் கடிந்து பேசுகிறான்:- இராமனும் இலக்குமணனும் காட்டில் புல் உணவு- இலை உணவு கொள்ள, யான் இங்கே, அமிழ்தம் என்று சொல்லும்படியான சாலி நெல் சோற்றை நெய்யோடு உண்டு கொண்டிருப்பேனேயாயின், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? என்கிறான்:

உய்யா கின்றேன் இன்னமும்; என்முன் உடன் வந்தோன்
கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண, கலம் ஏந்தி வெய்யோன்நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ

(81)

என்பது பாடல். என் முன் = அண்ணன் இராமன். உடன் வந்தோன் = இலக்குமணன். கை ஆர் கல்லை=கையே இலையாக (கல்லை = இலை), கலம் ஏந்தி=நான் சிறந்த உண்கலம் கொண்டு. சாலியின் வெண் சோறு=சாலி அரிசியால் ஆக்கிய வெண்ணிறச் சோறு. 'அப்படியே சோறு வெள்ளை வெளேர் என்று தும்பை மலர் போல் இருந்தது' என்று உலகியலில் கூறப்படுவதுண்டு. இங்கே, நெல் விளையும் தமிழ் நாட்டுக் கம்பன், மிகுதியாகக் கோதுமை விளையும் அயோத்தி நாட்டில் தன் நாட்டுச் சாலிவெண் சோற்றைப் புகுத்தியுள்ளமை நெய்யோடு கூடிய சாலி வெண் சோற்றைப் போல் பாடலைப் படிப்பதற்குச் சுவையாயுள்ளது.

நெய்யோடு உண்ணும் உணவு சிறந்தது என்பதை ஒளவையின் 'நெய்யில்லா உண்டி பாழ்' என்னும் நல்வழி நூல் (24) பாடல் பகுதியும் அறிவிக்கிறது. இது அந்தக் காலத்து உணவு வளத்தைக் குறிக்கிறது, ஒளவையைப் அ. ஆ.-6