பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 சுந்தர சண்முகனார்

போலவே தெலுங்கு மா கவிஞராகிய வேமன்னரும், தமது வேமன்ன பத்தியம் என்னும் நூலில்,

நெய்யி லேனி கூடு நித்திய கனுவதி
பிரியமு லேனி கூடு பிண்டபு கூடையா

என்று கூறியுள்ளார். நெய்யில்லாத உணவு சிறப்பற்றதாம். அன்பு இல்லாமல் கடமைக்கு இடும் உணவு, செத்த பிணத்திற்குப் படைக்கும் உணவு போன்றதாம். லேணிக இல்லாத. கூடு=கூழு. (தமிழ்)-கூளு (கன்னடம்) -உணவு.

ஆறு செல் படலம்

நான்கு யுகங்கள்

முடிசூட்டிக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்திய அரசவையோரை நோக்கிப் பரதன் கூறுகின்றான்: என் அன்னை கைகேயி செய்தது சரிதான்- நான் முடிசூடிக் கொள்ளவேண்டும்- என்று கூறுவீர்களே யாயின், இந்த யுகம், நடுவில் உள்ள இன்னும் இரண்டு யுகங்களையும் தாண்டி வந்திட்ட கலியுகமாய் இருக்கும் போலும்! பாடல்:

அடைவரும் கொடுமை என் அன்னை செய்கையை நடைவரும் தன்மைநீர் நன்று இது என்றிரேல், இடைவரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது கடைவரும் தீநெறிக் கலியின் ஆட்சியோ? (15)

இடையில் உள்ள இரண்டு யுகங்களைத் தாண்டிக் கடைசியாக வரும் கலியுகமோ இது- எனில், இப்போது உள்ள யுகம் முதல் யுகம் என்பது பெறப்படும். அதுதான் கிரேத யுகம், நாலாவது யுகம், கலியுகம். நடுவில் உள்ள இரண்டு, என்பன திரேத யுகம், துவாபர யுகம் என்பன வாம். இந்த நான்கனுள் கடைசியான கலியுகம் பொல்லா யுகமாம்.