பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. கருத்து வெளியீட்டில் புதுமைப் பொலிவு


மந்திரப் படலம்

நால்வர்

ஒரு கருத்தை வெளியிடுவதில் பலர் பல முறைகளைக் கையாளலாம். கம்பர் கருத்தை வெளியிடும் முறையோ புதுமையாய்ப் பொலிவு பெற்றிருக்கும். அவற்றுள் சில காணலாம்:

தயரதனது அவைக்கு எழுந்தருளிய வசிட்ட முனிவனது பெருமையைக் கம்பர் மிகவும் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளார். மற்ற அரசர்கட்குத் தயரதன் ஆணையிடுவானாம். அத்தகைய மன்னனுக்குக் கடவுள் போல் வசிட்டன் ஆணையிடுவானாம். வசிட்டனைத் தேவரும் மற்ற முனிவர்களும் வணங்குவராம். உயர் கடவுளர்கள் மூவர் (மும்மூர்த்திகள்) எனவும், அவர்கள் சிவன், திருமால், நான்முகன் என்பவர்கள் எனவும் கூறுவது ஒரு வகை மரபு. அந்த மூவரை அடுத்து நான்காம் கடவுளாக வசிட்ட முனிவன் உயர்த்தப் பட்டுள்ளான்.