பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


கப்பலோட்டிய - வெள்ளையனை எதிர்த்தார் வ.உ.சி.!

வெஞ்சிறை ஏகியே, கப்பிரமணிய சிவா -

தொழு நோயாளராக மாறினார்.

பாரதியார் கவிதைகளோ - தேசிய மறவர்களுக்குப்

படைக்கலன்களாகவே மாறின !

பாரதியார் எழுத்துக்கள், பாடல்கள் - தமிழ்நாடு முழுவதும் விடுதலை உணர்வுகளுக்குரிய வெடிகுண்டுகளாக உரு வெடுத்தன!

அவருடைய உணர்ச்சிகள் - எதேச்சாதிகாரத்திற்கு அடங்காத அடங்காப் பிடாரிகளாக ஆவேச நடைபயின்றன. ஆறு உடைபட்ட வெள்ளமாக உருண்டோடின!

பாரதியாரின் சந்தக் கவிதைகள்-விந்தையானவை, மலடாக இருக்கின்ற மான உணர்ச்சியைக் கூட - அவை சூலாக்கிவிட்டன!

வ.உ.சியின் தேசிய உணர்ச்சி, சிவாவின் உயிர் மூச்சு எழுச்சி - பாரதியாரின் தமிழ் - மூன்றும் முப்பெரும் படைகளாக விளங்கி, நாடெங்கும் விடுதலைக் களத்திற்கு வீரர்களைத் திரட்டின.

உண்டு உறங்கிச்சாவதற்காக பிறக்காத மனிதன்-பின் எதற் காகப் பிறந்தான்? இவ் வினா ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கிக் குலுக்கியது.

இலட்சியத்தின் அடிப்படையில் - கொள்கை வழியில் நடக்க வேண்டிய மனிதன் - இயற்கையால் நிர்ப்பந்திக்கப் படுகிறான்.

அவனது உரிமைகள் - அவனுடைய பரம்பரைச் சொத்துக்கள் - மனித வாழ்க்கைக் குரிய சான்றேடுகள்!

உயிரின் மீது கையை வைக்கின்ற மரணம், உரிமையின் மீது கை வைக்கப் பயப்படுகின்றதே - ஏன்?

எங்கோ இருந்து ஆட்டுத் தோலுக்கு இடம் கேட்டு வந்த வெள்ளை வியாபாரிகள் - இங்குள்ள தமிழர்களை - இந்திய சோதரரர்களை - வீணர்களாக -விலங்குகளாக-நடத்துவதை எனது ஊனக் கண்ணால் பார்க்கின்றேன். ஆனால், எனது கண்

102