புலவர் என்.வி. கலைமணி
அதைக் கண்டு வாளாவிருக்குமோ?
அவன் வணங்கும் மதக் கோட்பாட்டிற்கே, அவன் செயல்கள் ஒவ்வாததென்றால், என் இனக் கோட்பாடுகள் ஏங்குமோ அவற்றை?
எழுச்சியோடு எப்போதும் இணங்கி இருக்கும் ஒரு மனசாட்சி, ஒரு சர்வாதிகாரத்தைத் தாங்குமோ?
-என்று, கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டவர் பாரதியார்! அந்தச் சிந்தைகளிலே மிதந்து மிதந்து நொந்து களைத்துப்போனார்.
இவ்வினாக்கள் என்ற படைக்கலன்களால், உருவாக்கப்பட்ட அவரது கவிதைகள் வேகம் , வெள்ளையனைச் சற்று திரும்பிப் பார்க்க வைத்தது.
'கொக்கு பறக்குதடி பாப்பா' என்று பாடி விடுதலை உணர்ச்சியை நாடக அரங்கிலே உருவாக்கிய எஸ்.எஸ் விசுவநாதாசுக்குப் போட்டியாக, பாரதியார் கவிதைகள் மனோ வேகத்தை மக்களிடையே பீறிட்டெழச் செய்தன.
'சிறைச்சாலை என்ன செய்யும் - தேசாபிமானிகளை? என்று வினா தொடுத்துப் பாடிய எஸ். ஜி. கிட்டப்பா, கே.பி. கந்தராம்பாள் தேசிய உணர்ச்சிகளைவிட, வந்தே மாதரம் என்போம் என்ற பாரதியாரின் தமிழாக்கப் பாடல் - ஒரு தேசிய புரட்சிக்கே வித்திட்டது.
வெள்ளையனிடத்திலே இருந்த முப்படைகளின் சக்தியை விட, பாரதியார் கவிதைப் படைகளின் பலம் மிருகத்தனமான தேசாவேசமாக உருவெடுத்து, காட்டாற்று வெள்ளம் போல மக்களிடையே பெருக்கெடுத்தது.
பாரதியார் விடுதலை உணர்வு, ஆங்கில ஆட்சிக்குப் பயங்கரக் கூற்றாக மாறுவதைக் கண்ட வெள்ளையன், நாடு கடத்தினான் - பாரதியாரை !
ஓரிடத்திலே இருந்து வேறோர் இடத்திற்கு உடலை மாற்றச் சட்டத்தால் முடியும் ! ஆனால் - உணர்வை?
இலட்சிய உணர்வு, எந்தக் குறிக்கோளை நோக்கி பாய விரும்புகின்றதோ - அங்கேயே அது மொய்த்துக் கிடக்கும்
103