பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


வடிவமாக்கி, இந்தி எதிர்ப்புப் போருக்கு அறிஞர் அண்ணா அவர்கள் இறுதி முற்றுப் புள்ளியை வைத்தார்!

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், கிழக்குத் திசை நோக்கிக் கடவுளை வழிபடுவார்கள். காரணம், சுகபோகங்கள் பெருகி மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக!

மேற்கு நோக்கிச் சிலர் வழிபடுவர், காரணம் - பொருளும் - சொர்ணமும் உலகம் போற்றுமளவிற்குப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக !

துறவிகள், இறைவனைத் தெற்கு நோக்கி வணங்குவார்கள்! காரணம், உலகம் உவந்து வியக்கும் ஞானம் பெறுவதற்காக!

வடக்கு நோக்கி வழிபடுபவர்களும் உண்டு ! காரணம், புத்தம் சித்த கத்திப் பெற்றுச் சித்தர் - நிலையை அடைவதற்காக!

அதனைப் போல தமிழர்களான நாம், அண்ணா சதுக்கமுள்ள திசை நோக்கி வணங்கல் வேண்டும். ஏன்? தமிழன்னைக்கு எந்த மொழித் திணிப்பாதிக்கத்தாலும் தீமைகள் வராதிருப்பதற்காக ! வந்தால், தொண்டு புரியும் மனம் பெறுவதற்காக !

'மலையினும் எது பெரியது' என்று சோழ மாமன்னன் சேக்கிழார் பெருமானைக் கேட்டபோது, 'நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்' என்றார்!

'கடலில் பெரியது எது' என்ற போது, 'பயன் தூக்கார் செய்த உதவி' என்றார்!

'உலகில் பெரியது எது?' என்று பாவேந்தனைக் கோவேந்தன் விளித்தபோது, 'காலத்தினால் செய்த உதவி' என்றார் சேக்கிழார் பெருமான்.

இடைக்கால ஒளவை பிராட்டியைப் பார்த்து, 'எது பெரியது?' என்றபோது, 'இறைவன் தொண்டருள் ஒடுக்கம்' தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்றார்!

அதனைப் போல, 'தமிழ் மொழிக்காகப் போராடியவர்கள், அதற்காக உயிர் நீத்த தொண்டர்கள் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற நோக்கில், தமிழுக்காக அரும்பாடுபட்ட தமிழ்த் தொண்டர்களின் மொழிபக்தியை முறையாகத் தொகுத்து, எதிர்கால அரசியல், இலக்கிய, மொழி, சமுதாய உலகுக்குத்

122