பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


களின் உணர்வுகளைத் தலைதுாக்க முடியாமல் சாய்த்து விட்டிருக்கின்றன.

இந்த அரக்கப் போர், கவிஞருக்குரிய கருத்து வீழ்ச்சி அல்ல, படத்தின் வசூலுக்குரிய தாழ்ச்சியே. கவிஞர் முத்துலிங்கம் பாடல், சில இடங்களில் இருளை விரட்டிடும் நிலவாக ஒளியுமிழ்கின்றன.

வேறு சில படப் பாடல்கள், சொற்போர் நடத்துவோர் வாதங்களாகவும், மற்றும் சில பாடல்கள், அருவி போல சலசலக்கும் பேச்சுக்களின் விவாதங்களாகவும் விளங்குகின்றன.

பாவேந்தரின்,"கொலை வாளினை எடடா" என்ற பாடலைப் போல, கொடியோரின் சமூகக் கொடுமைகளை வேரருக்கும் கோடாரி வீச்சுக்களாக சில பாடல்கள் உள்ளன.

திராவிடரியக்கக் கவிஞர்களது உணர்வுகளை ஆங்காங்கே கோலாகலமாகக் கொடிகட்டிப் பறக்கவிட்டுள்ள காட்சிகளையும் கவிஞர் முத்துலிங்கம் ஆற்றியுள்ளார்.

திரையுலக ரசிகர்கள் மட்டும் அல்லர், இலக்கிய சிந்தனையுள்ள தேனீக்களும் இந்த இசைமலர் தேன்துளிகளை உண்டு மகிழ வேண்டிய ஒரு பனுவல் பூந்தோட்டமே கவிஞருடைய திரைஇசைப் பாடல்கள் என்ற இந்நூல்!

129