பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி



ஹெராக்ளிட்டஸ்

பிதோகரஸ்

சிந்தனைகள்

ரிசக்தி என்றால் என்ன? எத்தனை வகை? எப்படி அது உருவாகின்றது? உலகுக்கு அது ஏன் தேவை?

எரிசக்தியன் தன்மை என்ன? நன்மை என்ன? வன்மை என்ன? அதன் பிரிவாக்க சக்திகள் என்னென்ன?

"எரி என்ற ஏராளன்", சக்தி என்ற நிலத்தை விவசாயம் புரிகின்ற போது, அதன் சந்ததிகளாக - பிற சக்திகள் சிற்சில பயிரினங்களாகப் பிறப்பெடுக்கின்றன.

'தாய் - எரி - சக்தி - தந்தை இருபாலரும் இணைகின்ற சந்ததிகள்தான், பல சக்திகளாக, பரம்பரைகளாக, தலைமுலைகளாக நடமாடுகின்றன ! - உலகியலில்!

பரன் + பரை, தானே - பரம்பரை? அதாவது, தலைவனும் தலைவியும் சேர்ந்து, ஏன், ஆண்-பெண் என்ற இரு சக்திகளும் ஐக்கியமாகி, பிறப்பதுதானே பரம்பரை?

ஒரு துளி கண்ணீரைச் சோதிக்கின்ற விஞ்ஞானி, அதில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு அழுக்கு எவ்வளவு? என்ற கணக்கைக் கொடுப்பான்?

கண்ணீர் வருவது எப்படி? என்ற வினாவிற்கு விரிவுரை கூறுவான் உடற்கூறு மேதை!

நல்லதா கெட்டதா கண்ணீர் வருவது? என்ற ஆய்வுரையை ஆற்றுவான் மருத்துவ வித்தகன்!

எப்போதெல்லாம் ஒருவனுக்குக் கண்ணீர் வரும்? என்றே சிந்திப்பான் மனோ தத்துவ ஞானி!

கண்ணீர் வருவதற்குக் காரணம் என்ன? என்ற எண்ணி விடை காண்பான் தத்துவஞானி!

கண்களால் காண முடியாதவற்றை, அறிவியல் நம்பாது கண்களால் காணமுடியாதவற்றைப் பற்றிய ஆய்வும் -

133