பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தேடுதலும்தான், அறிவியலுக்கான அலாவுதின் அற்புத விளக்காகும்.

அதனைப் போல 'எரிசக்தி'க்கான ஆய்வும் தேடுதலும், அறிவியல் வித்துக்களாக விதைக்கப்பட்டிருக்கின்றன.

அவனியின் நாகரிக வளர்ச்சியில், நீருக்கும் - காற்றுக்கும் அமைந்துள்ள சக்திகளைவிட நெருப்புக்குத்தான் மிக அதிக சக்தியாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள், வரலாறுகள், எல்லாம், தீயின் தேவைகளை - எரியின் நெறிகளை - பெருமைகளை - அருமைகளை - சிறுமைகளை - வழிபாடுகளை அழகாக வரையறுத்துள்ளன.

எரி, அழிக்கும் சக்தியுடையதல்ல - ஆக்கம் தருகின்ற சக்தி! இது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை - அறிவியல்!

“எதுவும் ஒன்றல்ல எல்லாம் இரண்டே!" என்றான், கிரேக்க அறிஞன் பிதாகொரஸ்!

“எதுவும் இரண்டல்ல, எல்லாம் ஒன்றுதான்” என்ற, வாதப் போரிட்டான் - அதே கிரேக்கத்தில் பிறந்திட்ட ஹெராக்ளிட்டஸ் என்ற மேதை !

"காலம் நிலையான ஒன்றல்ல, மாறுதலுக்கு உட்பட்டது மட்டுமல்ல - மாறுதலேதான்" என்று, அறியாமைக்கு ஆணியறைந்தான் அவன்.

"மாறுதல் என்பது, இயற்கையின் நியதி, மாறுபடாத ஒன்றும் உலகில் இல்லை. எதுவும் மாறவில்லை என்று கூற முடியாது” என்றான்.

எனவே, மேதினியின் மேன்மையான தோற்றம் ஒவ்வொன் றும் மாறுதல்தான் என்பது, அசைக்க முடியாத அறிவு!

"அவ்வாறு , மாறுதலுக்குரிய காரணம் என்ன? அதுதான் எரிசக்தி! அவனிக்கு நேரிடையான பொருள் எரிசக்திதான்!

"Ever Living fire is world meaning"- என்று வரையறுத்து வாதிட்டான்!

அதற்கு என்னென்ன காரணங்களைக் காட்டினான் தெரியுமா? ஹெராக்ளிடஸ்?

134