பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


எந்த உடலிலும், உணவு செரிமானமாவது எப்படி? எரிசக்தியால்தான் என்றான்.

குன்றேறி நின்றார் முதல், குணக்கேடன் வரையுள்ளவனுக்குக் கோபம் வந்தால், கண்கள் கோவையாவது ஏன்? எரிசக்திதான்.

பூமியிலிருந்து குறிப்பிட்ட அளவிற்கு மேலேயும் - கீழேயும் சென்றால், வெப்பம் வேக வைக்கிறதே ஏன்? எரிசக்திதான்!

குடம்பையில் உயிர் வாழும்வரை சூடு இருக்கிறது. புள் பறப்பது போல அது பறந்துவிட்டால், உடல் குளிர்ந்து விடுகிறதே அது ஏன்? எரிசக்தி இல்லை என்பதால் அல்லவா!

பகல் இரவாகின்றது, இரவு பகலாகின்றதே, ஏன்? எரிசக்தி இழப்பால் ஏற்படும் குளுமை! தட்பத்தைத் தவிர்த்த வெம்மையால்தானே?

வினாக்களை இவ்வாறு தொகுத்து விடை கண்டவன் ஹெராக்ளிடஸ் என்ற அற்புத அறிஞன்!

அதனால் கிடைத்த விடைகள்தான், எரிசக்தியின் பெயரால் பிறப்பெடுத்துள்ள பிற சக்திகள் எல்லாம் என்பதை அறியலாம்.

இன்றைய அறிவியல் உலகம், அறிந்து, - புரிந்து உணர வேண்டிய ஆழ்கடல் முத்து - எரிசக்தி!

135