பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


"உலக வாழ்வு செல்வத்தால் உயர்கின்றது. வினையாண் மையால் செல்வம் விளைகின்றது. அதே செல்வம்தான் வாழ்க்கையையும் வளமாக்குகின்றது”

"ஜப்பான் நாட்டு மக்களைப் போலப் பொருளாதார வாழ்க்கையில் மேம்பட, "செய்க பொருளை" அதற்கான பணிகளை ஆற்றிட மயங்காதே தமிழா ! தயங்காதே தமிழா! அதனால்தான் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று திருவள்ளுவர் நமக்கு கட்டளையிட்டார்” என்றார் அறிஞர் அண்ணா.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் பெருமான் கட்டளையை முழக்கமிட்ட அறிஞர் அண்ணா அவர்கள், "அருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற அந்தப் பாதிக் குறட்பாலை விளக்காமல் விட்டுவிட்டார் - ஏன்?

ஆன்மிக வாழ்க்கையின் நுட்பங்களை, அதன் பெருமை அருமைகளை, அதனால் விளையும் மேலுலக அற்புதங்களை விளக்கும் வைதீக மதப்பணி, நமது அருளாளர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைப் போன்ற பிற ஞானமகான்களின் தொண்டு என்பதனால், "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்ற பாதிக் குறட்பாலை அவர் தொடாமல் விட்டுவிட்டார்.

"Time is a precious gift" -

என்பது மாவீரன் நெப்போலியனுடைய வாக்கு. "காலம் அரிய தெய்வக் கொடை' என்பதைப் புரிந்து சுவாமிகள் அருந்தொண்டு புரிகின்றார்.

இளமை ஒரு நீர்க்குமிழி, நீரில் சுருளும் அலைகள், வந்து வந்து போகும் செல்வங்கள், நீர் மேல் எழுதும் எழுத்து - மக்கள் வாழ்க்கை.

நிலையற்ற இந்த மூன்றையும் நீக்கி, நிலையுற்ற இறைவனின் பேரின்பம் பெறுவது பிறப்பின் தத்துவம் என்று நாள்தோறும் மக்களிடையே உலா வந்து, பொழியும் மேகம் போன்றவர் நமது ஞானச்சுடர் ஜெயேந்திரர் அவர்கள்.

நீரால் வாய் புனிதப்படாது, புகழப்படாது, ஆன்மிகக் கல்வியின் ஞானம் மட்டுமே அருள் வாய்ப் பட்டுப் புனிதப்படும்

144