பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


களாருக்குப்- பிறகு, தனித் தமிழ் இயக்கத்தின் தலைவராக விளங்கி வருபவரும், திராவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்பவருமான, மூதறிஞர் பண்டித ஞா.தேவநேயப்பாவணர் எம். ஏ. அவர்கள், இந்த மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்துள்ளார்.

அவர் ஒரு கிறித்துவர்தான் - என்றாலும், தமிழ் மக்களுக்கு நியாயமான - நேர்மையான - கடமையான நீதியை - தீர்ப்பை வழங்குவார் என்பதிலே, நம்மைப் பொறுத்தவரை நம்பிக்கை இருக்கின்றது.

புலவர் தெய்வ நாயகம் என்பவர், "அய்யன் திருவள்ளுவரைக் கிறித்துவர்” என்கிறார்.

அதற்காக, "திருவள்ளுவர் கிறித்துவரா? ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார்? எழு பிறப்பு, சான்றோர் யார்?" என்ற ஆறு, ஆய்வு நூல்களை எழுதியிருக்கின்றார்.

ஒவ்வொரு நூலுக்கும் அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும் 36 பேரறிஞர்கள் இங்கே வருகை தந்துள்ளீர்கள்:

அணி உறுப்பினர் ஐவரும், அவரவர் அணி நூலை நன்கு படித்து, அதனை ஆய்வு செய்து, அவருடைய கருத்தை எழுதித் தந்துள்ளார்கள்.

அவ்வாறு அவர்களால் தரப்பட்ட ஆய்வுக் கருத்துக்களை அணித் தலைவர்கள் படித்து, அவற்றின் மேல் அவரவரது ஆய்வையும் வழங்க வேண்டியுள்ளார்கள்.

வழங்கப்பட்ட அந்த அறுவரணியின் ஆய்வுகளை - நகல்கள் எடுத்து, இங்கே அமர்ந்துள்ள மற்ற அணிகளின்அறிஞர் பெருந்தகைகளுக்கும், சான்றோர்களுக்கும் அந்தந்த அணிகளின் நகல்களை எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு அணியினர் அனைவரும், அவரவர் ஆய்வுப் பொருளுக்கு ஏற்ப, தடை விடைகளுடன் இங்கே உங்கள் முன்பு தத்துமது கருத்துக்களை நாட்டி, வழக்காடி வாதமிடுவர்.

அந்த ஆய்வாளர்கள் கருத்துக்கள் மீது, இந்த ஆய்வு மாநாட்டின் தலைவர் மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்

148