பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தன்மதம் தாண்டவமாடுகின்றதே அன்றி எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை.

திருக்குறளுக்கு உள்ளே சென்றவரின் பாவ மூட்டை எவ்வளவு கனமாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மதத்தின் புண்ணியத்தையும் அதிலிருந்து தேடிக் கொண்டார்கள்.

கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே "second hand person" எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவை கூட, நேரிடையான பொருளை ஒர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது.

ஆனால் திருக்குறள் தமிழ்தான்! அதிலுள்ள எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள்தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும் - மதத் தத்துவங்கள் அனைத்தும் - தங்களுடைய அடிப்படைகளுக்கு எதாவது கிடக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் - திருக்குறளின் பெருமை என்னே!

தமிழ்நாட்டில், ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்த பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும் பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு இங்கே பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில், குறள் - இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்றுகூடச் சொல்லிவிடலாம்.

காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் - இறப்பும் காலண்டரில் தெரிகிறது.

குறளாசிரியரின் எப்போது பிறந்தான்-எப்போது இறந்தான் என்று கூட இதுவரைத் தெரியவில்லை.

அதன் உரையாசிரியர்களும் - ஆய்வாளர்களும் அவரவர்

152