பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


 முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கண நூல் - உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறள் தவிர !

இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய்மூடுமுன், ஏன்-இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது. வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தன் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கிறது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது,

திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஒடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது.

திருக்குறள் உருவான காலத்தை யாராவது அவசரப்பட்டுக் கூறிவிட்டால், அந்தக் கால கட்டத்தில் வந்து சேர்ந்த மதத்தவர்கள், இது எங்கள் நூல் என்று கூறிக்கொள்ள இப்போதும் தயாராக இருக்கின்றார்கள்.

அந்தந்தக் காலத்தில் உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக் காலத்தை வைத்தே திருக்குறளின் காலத்தை நிர்ணயித்தார்கள். அதனால்தான், குறளுக்கு உரையாசிரியர்கள் இவ்வளவு வேகமாகப் பெருகலானார்கள்.

திருக்குறளின் காலம் இதுவரை தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.'அப்போது அது எந்த மதத்துக்குச் சொந்தம்?

உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள காலம்தானா திருவள்ளுவர் காலம்? அந்த அறிவுக்கு திட்டவட்டமான கால வரம்பு கண்டதுண்டா?

திருக்குறளைப் பொறுத்தவரை காலம் கடந்த ஒன்றாக இருக்கும்போது, காலச் சக்கரத்தில் மதங்கள் அடிபடுகின்ற போது, தமிழன் என்ற முறையில்- எனக்கு மகிழ்ச்சி என்றாலும்,

153