பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


தன்னேரிலா அறிவு அரிமாக்கள் அனைவரும் - சூத்ர வடிவில் யாப்பு செய்யுள் வடிவில் நுட்பம் செறிந்த செஞ்சொற்களைப் பெய்து, மந்திரம்-மறை போன்ற பொருளாட்சிகளைப் புதையல் போல் வைத்துள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக, தொல்காப்பிய நூற்பா ஒன்றை எண்ணிப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். அதன் பொருட்சிக்கல் பேரறிஞர்களையே திணறடித்துள்ளது!

தன்னேரிலாத் தமிழில் சொல்லுக்கு, முதலில் வரும் எழுத்து என்றும், இறுதியில் வரும் எழுத்து என்றும் இரு வகை உண்டு. த் + உ = து, ந் + ஊ = நூ, வ் + உ = வு, வ் + ஊ = வூ என்ற நான்கு எழத்துக்களும் சொல்லின் இறுதியில் வாரா என்று காப்பிய சூத்திரம் செப்புகின்றது.

"உ, ஊ, காரம் ந, வ, வோடு நவிலா" என்பது தொல்காப்பிய நூற்பா, இதற்கு உரை மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

உரையாசிரியர்களுக்குள்ளேயே எழுந்த இந்த விடை - தடைநோக்கில், கதவு, களவு, உணவு, உளவு, புணர்வு, உணர்வு போன்ற சொற்களில் 'வு' என்ற எழுத்து சொல் இறுதியில் வந்துள்ளதே ஏன் - எப்படி என்ற கேள்விகளைச் சிலர் எழுப்பினர்!

அத்தகைய சான்றோர் சிலர் எழுப்பிய இந்தத் தடைக்கு விடையாக, 'நவிலா' என்ற சொல்லால் மேற்கண்டவாறு பொருள் கொள்ளலாம் என்றார்கள் - உரையாசிரியர்கள்!

ஆனால், இந்த நூற்பாவில் ஏதோ ஒரு பொருட் சிக்கல் உள்ளது போல தோன்றுகிறது என்ற ஐயம் இலக்கிய உலகில் இருந்தது. தொல்காப்பியம் இலக்கண நூலை எழுத்தெண்ணி படித்தவர்களை, எக்காலத்திலும் விரல் விட்டு எண்ணிவிடலாம்!

தொல்காப்பிய வித்தகக் குறைவு என்பதால், சர்ச்சை ஏதும் அந்நூற்பாவுக்கு அன்று எழவில்லை - அறிஞர்களிடையே!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள், ஒரு தமிழ் இலக்கிய மேதை அவர் இந்த நூற்பாவின் சிக்கலை நீண்டநாட்களாகவே உணர்ந்திருந்தார்.

அக்காலை, மதுரை தமிழ்ச் சங்கத்தின் பெரும்புலவரான சோழவந்தான் அரசன் சண்முகனாரை - வ.உ.சி. அடிக்கடி

159