பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


ஏனென்றால், திருவள்ளுவர் ஒரு திறந்த வெளி! ஒன்று ("status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness") இருந்து எழுதியவர்.

எழுதிய அய்யன் திருவள்ளுவன் இல்லாத நிலையிலிருந்தால், உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் - குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா?

அந்த நிலையில் எழுதப்பட்ட உரைகளையே புலவர் தெய்வ நாயகம் மறுத்திருக்கின்றார். அவர்களின் கூற்று சரியா? தவறா? என்பதைவிட, திருவள்ளுவம் என்றால் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். உங்களது எல்லையிலே இருந்து அது வராமல், உலக எல்லையிலே இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்த பெரு முயற்சியை, அய்யன் திருவள்ளுவர்பால் நாட்டங் கொண்ட கிறித்துவ அன்பர்கள், புலவர் தெய்வ நாயகத்தின் புத்தக சந்தர்ப்பத்தின் வாயிலாகத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்!அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக, கிறித்துவக் கலை - தொடர்பு நிலையத்தின் இயக்குநர் - அருட்திரு சுவிசேஷ முத்து அவர்கள், இந்த அறிவு விளக்கப் போட்டிக்குப் பொருளைத் துச்சமாக மதித்து எடுத்த முயற்சிக்குத் தமிழகம் கடமைப் பட்டிருக்கின்றது!

இருப்பினும், அய்யன் திருவள்ளுவரை கிறித்துவராக்க அவருக்கும் ஒரு பேராசை! கிறித்துவத்தின் ஊழியரல்லவா அவர்?

இல்லாவிட்டால், சர்ச் ஆஃப் சவுத் இண்டியா, திருவள்ளுவரைக் கிறித்துவராக்க - நூல் எழுத, ரோமன் கத்தோலிக்க சென்னை திருச்சபைத் தலைமை அதை வெளியிட - தொகை உதவி செய்ய, பிராட்டஸ்டண்டு பிரிவு பல்லாயிரம் ரூபாயைச் செலவு செய்து இந்த மாநாட்டை நடத்துமா?

மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் - இயேசு நாதருக்குச்-

161