பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். என். வி. கலைமணி


தத்துவத்தை 1952 - ஆம் ஆண்டுக்கு முன்பேயே சிந்தித்துவிட்டான் திருவள்ளுவன்.

இவனுக்கு வால் நட்சத்திரம் முளைக்கவில்லை -மாட்டுக் கொட்டகை ஏதும் இல்லை.

என்ன இருந்தாலும், நம் நாட்டவர்கள் ஒரு மனிதனை தெய்வமாக்குவது இல்லை, அறிவிலே நுட்பஞானத்தைப் பாராட்டினர். அதற்கு வைதீகன் ஆன்மீக சாயம் பூசி விட்டான் அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு தத்துவ விதையிலே இருந்து, உலக மூலச் சக்தியிலே பிறந்து, விளக்க முடியாத ஒருவராகி, தமிழ் எழுத்துக்களால் வாழ்வறிவு வண்ண மாயங்களைச் செய்த ஒரு மனிதரை புலவர் தெய்வநாயகம் மத விசாரணை விசாரிக்க வந்திருக்கிறார்.

இந்த விசாரணையில், நீங்கள் பெற்ற பட்டங்களை அடகு வைப்பீர்களோ ! - மீட்டுக் கொள்வீர்களோ! அது எனக்குத் தெரியாது.

மனித இனம் இருக்கின்றதே, இந்தியாவைப் பொறுத்தவரை ஏழாயிரம் - எண்ணாயிரம் ஆண்டுகளின் சரக்கு!

அதற்கு மேல் சரித்திரமில்லை-அதனால், இவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. தங்களது வீட்டிலிருக்கின்ற குழந்தை, நேரடியாக ஒரு குருவைப் பார்த்து பொருள் புரிந்து கொள்வதைப் போல, தந்தையாக இருப்பவன் புரிந்து கொள்வதில்லை.

குழந்தையின் சிரிப்பைப் பார்த்து இவன் சிரித்தானே ஒழிய, அந்தக் குழந்தை ஏன் சிரித்தது என்று இவனுக்குத் தெரியாது.

இப்படிப்பட்ட சமுதாயக் குடும்ப அடிப்படையில் பிறந்த நாம், திருக்குறளைச் சந்திக்க வந்திருக்கின்றோம்.

திருக்குறளின் எழுத்துக்கள் - வைதீக அடிப்படையில், வானத்திலிருந்து வந்தவையென்று புளுக எனக்கு விருப்பமில்லை - என்னால் முடியாது.

மிருகத்தைவிட - ஒரு மனிதன், மனிதத்தில் ஒரு மனிதன் - இவ்வளவுதான் சிந்தித்திருப்பான் என்பது எனக்குத் தெரியும்.

165