புலவர் என்.வி. கலைமணி
மூச்சு எவரின் மூச்சு? எங்கள் மூச்சு என்று நான் வினா விளித்துக் கவிதைக் குரலின் கண்டத்தை உயர்த்தியதும், அதிகார போதை அந்தந்த இடத்திலேயே பொட்டென்று விழுந்தது.
எங்கும் புலமை - எங்கும் விடுதலை - எங்கும் புதுமை கண்டாய் நீதான்.
'அங்கு தமிழன் திறம் கண்டாய் - அங்கு தமிழன் தோளே கண்டாய்" என்று நான் தமிழரைத் துயில் நீக்கியபோது தமிழ்ப் பகைவர்கள் வைக்கோல் போர்போலக் குடை கவிழ்ந்தார்கள்.
“பாடாத தேனீக்கள் - உலவாத் தென்றல் - பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?"
“மணவாளன் இறந்த பின் மங்கை நல்லாள் மணமுடித்தல் தீதோ?” என்று கருத்துப்பட நான் உரைத்தபின் வைதீகத்தின் விலா எலும்பு நொறுங்கியது!
“காட்டை அழிப்பதும் கூடும் - அலை
கடலைத் தூர்ப்பதும் கூடும் -
பேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும் -
ஏட்டையும் நூலையும் தடுப்பதும் கூடும்!
உரிமை எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?
"கோட்டை நாற்காலி இன்றுண்டு நாளை,
கொண்டுபோய் விடுவான் திராவிடக் காளை"
-என்று கூறியவுடனேயே, தமிழ்ப் பகைவனுக்குக் குற்றவேல் செய்து வந்த இழி மக்கள் அந்த இடத்திலேயே இற்று விழுந்தனர்.
கடலினும் வானிலும், கவினுறு நிலத்திலும் -
வாழ் உயிர் அனைத்தும் மக்கட் கூட்டமும் வாழுமாறு-அன்பு மணிக்குடையின் கீழ் உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்புலவர்கள் உலகப் பொன் இலக்கியமாக்கினர் - மறவரோ, அறியாமையை அறிவு தாக்குமாறு - அமைதியைத் தாழாது காக்க -
173