பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயேசு ஒரு சீர்திருத்தவாதி

{{left margin|10em|(சென்னையில் உள்ள கிரிஸ்துவக் கலை - தொடர்பு நிலையத்தின் இயக்குனராகப் பணிபுரியும் தமிழ் சான்றோர் அருட்டிரு. கவிசேச முத்து அவர்கள், இயேசு பிரானைப் பற்றி கவியரங்கம் ஒன்றை நடத்தினார். அக் கவியரங்கத்திற்கு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் அவர்களின் செல்வரும், 'அமெரிக்கன் ரிப்போர்ட்டர்' என்ற ஏட்டின் பொறுப் பாசிரியருமான வ.உ.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை ஏற்றார். அவ்வமயம் பன்னிரு கவிஞர் பெருமக்கள் இயேசுவுக்குப் பாமாலை சூட்டினர். அவற்றுள் சவுக்கடி. ஆசிரியரான, 'எரியீட்டி' என்.வி, கலைமணி அவர்கள் சூட்டிய பாமாலை இது.)}

தமிழ்த்தாய் வாழ்த்து

கண்ணேறு படுமென்று தமிழே! உன்னைக்

கண்ணாக நான்கழுந்தேன் தாயே! நெஞ்சப்

பண்ணென்று சொல்கின்ற உயிர்த்து டிப்பில்

பலகாலம் உன்சதங்கை ஒலியைக் கேட்டேன்.

மண்ணின்மேல் முதன் முதலாய் சப்த மிட்ட

மணிகண்டம் உன்கண்டம் நீயெனக்குக்

கண்நாடி வருகின்ற காட்சி யானாய்

கைக்குழந்தை நானம்மா காப்பாய் தாயே!
அறிஞர் அண்ணா வணக்கம்

அண்ணாவே! நீ வளர்த்த தமிழை, அந்த

அருந்தமிழில் புதைந்திருந்த கண்ணி யத்தை

மண்கவர்ந்த மாசற்ற அன்பைக் கண்டு

178