இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேறு
இயேசுவின் கண்கள் வைர விளக்கொளி
இயேசுவின் உதடுகள் திராட்சை இளங்கொடி
இயேசுவின் முகத்தில் ஞானப் பிழம்பொழி
இயேசுவின் அசைவுகள் எல்லாம் அறிவொளி!
கர்த்தர் விதையில் முளைத்த கனியே
காலத்தை வெல்லத் தழைத்த இறையே
சர்வ வல்லமை சத்தியம் நீயே
சரணடை யாத சாந்தம் நீயே
உன்விழி திறந்தால் பாவம் ஒடுங்கும்
உன்வாய் திறந்தால் கொடுமை நடுங்கும்
உன்கால் நடந்தால் அன்பு தொடங்கும்
உன்கை அசைந்தால் உலகே அடங்கும்
வேறு
| கேடு | களைத்திட கூடு தழைத்திட |
| நாடு பிழைத்திட | |
| வந்ததுவே ஒரு தென்றல் - அது | |
| இயேசுவெனும் மணமன்றல் | |
| வீடு | களித்திட நீடு சுகம்பெற |
| தேடு சுதந்திரம் | |
| தந்ததுவே ஒரு தெய்வம் - அதைக் | |
| கண்டுகளித்தது வையம்! | |
| ஏடு | இனிக்குது நாடு சுவைக்குது |
| மூடு பனித்திரை | |
| நீக்கிடவே வந்த பாலன் - பாவம் | |
| தாக்கிடவே வந்த சீலன்! | |
| மேடு | தகர்த்துப் பூங்காடு இயக்கியே |
| வீடு அளித்திடும் | |
| நாயகனே நமதேசு - அவர் | |
| நெஞ்சிலே ஏது மாசு? |