பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ்க் கூத்து
புலவர் த. கோவேந்தன், டி.விட்

உலக மொழிக்கெல்லாம் மூல மொழியாகவும், வட இந்திய மொழிக்கெல்லாம் தாயாகவும் விளங்குவது தமிழ்.

உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத இயல், இசை, நாடகம் என்ற ஏற்றத்தைத் தோற்ற நாள் முதலே ஊற்றாய் கொண்டது தமிழாகையால், முத்தமிழ் என்று பெயர் பெற்றது. அம் முத்தமிழ், இசைத் தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் என வழங்கும் வழக்கு, அவ் வத்துறையைச் செவ்விதினை விளக்கத் தமிழிசை, தமிழியல், தமிழ் நாடகம் என்ற புத்தொளியையும், புத்துணர்வையும், புத்தெழுச்சியையும், காலந்தோறும் நிலமும், நீரும் நெருப்புமாய்த் தமிழர் வாழ்வில் உலவி, உயிர்ப்புடன் ஓங்கிய நிலையில் இருக்கின்றது.

சங்கச் சான்றோர்கள் அகப்புற எண்ணங்களை அவரவர்க் குரிய உயர்வெண்ணங்களால் மயர்வற நயம்பட உரைத்தனர். அகவல் ஒசையும், கலியின்துள்ளலோசையும், பரிபாட்டின் பண்னார்ந்த தனியோசையும், எண்ணங்களின் ஏற்றங்களுக் கெல்லாம் சிறுசிறு தொடராகவும், செந்தமிழ் தாழை மடலாகவும் மனம் வீசின.

காப்பிய காலத்தில், இளங்கோவடிகள் இசையின் ஆழ அகலங்களையும், இயற்றமிழின் பரப்பையும் விரிப்பையும் நாடகத் தமிழின் நளிநயங்களையும் மலையிடைப் பிறவாமணி யாகவும், யாழிடைப் பிறவா இசையாகவும், ஆழியிடை பிறவா அமிழ்தாகவும், காப்பிய நோக்குக்கும் போக்குக்கும் உரிய நடையில் கோத்தமைத்தார்.

மூத்த தமிழ் யாத்த சீத்தலைச் சாத்தனாரோ, புத்தரின் மெய்ப் பொருளை மணிமேகலையின் கைத்தலம் பற்றி அறியாமைப் பசி

18