புலவர் என்.வி. கலைமணி
நோய்க்கு அறிவுப் பசி தீர்க்கும் அமுத சுரபியாய், அகவலோசை யில் தமிழ்க்குப் புதுப் புதுத் தகவல்களைத் தரும் பகலொளி நடையைத் தந்தார்.
திருத்தக்கத் தேவர் முதல், கவிக் கோவேந்தன் கம்பன் வரை, வடநாட்டுக் கதைகளைத் தமிழில் பழமைப் பண்ணையில் புதுமை விளைவிக்கும் முயற்சியில், அயற்சியின்றி கலியில் வருத்தப்படாமல் வளர்ந்த விருத்தப்பாவில், கருத்துக்கேற்ப ஆயிரம் திருத்தமான நடைகளைப் பொருத்தக் காட்டினார்.
தேவார முதலிகளிலும், திருவாசகம் ஏற்ற இரக்க அருளிரக்க நடை காட்டியது. நாலாயிரத்தில் நூலாயிர நடையின் நுட்பங் கள் பெரியாழ்வார் முதல் நம்மாழ்வார் வரை கடவுட்பற்றின் மேலாயிர நளி நயங்களுடன் கூத்தியற்றியது.
இடைக் காலத்தில் அனைத்தும் சமற்கிருத வெறியர்களின் பாடை நடைதான்.
குற்றாலக்குறவஞ்சியில் திரிகூட ராசப்பனும், முக்கூடற் பள்ளும், நந்திக் கலம்பகமும் பெயர் தெரியாப் புலவனின் உயிரோட்டமும் உணர்ச்சியோட்டமும், காதலியின் புணர்ச்சியில் மகிழும் மலர்ச்சியின் உள மலி உவகையும் மெய்மலி உவகையும், மொழி நடையில் களிநடம் பூண்டது.
இருபதாம் நூற்றாண்டின் வைகறையில் ஒளியும்தெளிவும் பெற்ற வள்ளலாரின் அருட்யாவில், தமிழ்நடை கோடையிலே வீசுகின்ற தென்றலாகியது.
புதுமைக் கவி சுப்பிரமணிய பாரதியின் பாட்டிலும் - உரைநடை, இரண்டிலேயேயும் தமிழுக்குப் புது வாழ்வு தந்தான். தமிழால் அவன் பெற்றத்த தகுதியினும் தமிழ் பெற்றத் தகுதியே மிகுதி. அவன் நடையில் இல்லாததில்லை.
ஆயிரம் நரம்புடைய பேரியாழின் பண்ணின் தாயிடமாக அவன் நடையின் உள்ளத்தின் உண்மை ஒளியும் ஊழிக் கூத்தும் கொண்டன.
தன்மான இயக்கத்தின் தந்தை பெரியாரிடம் தமிழ் உள்ளொளி பெற்றது. எதையும் உணர்த்தும் திறனைப் பெற்றது. அலங்காரமற்ற பகுத்தறிவணங்கே உயிரோட்டத்தில்