உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி




அதற்கோர் நிகழ்வு, 1972, மே மாதம் 3 - 4-ஆம் நாளில் திருவள்ளுவரை ஒரு கிறித்துவர் என்று காட் ட நண்பர் புலவர் முனைவர் தெய்வநாயகம் அவர்கள் ஆறு நூல்களை எழுதி மாநாடு நடத்தினார். கருத்தில் வேறுபட்டும் மாறுபட்டு இருந்தாலும், அவரின் ஒரு சார்பு வேட்கையை மாய்க்க, அருந்துணையாகவும், பெருந்துணையாகவும் நின்று விளங்கியவர் நம் என்.வி. கலைமணி.

தமிழகத்தின் பல பேரறிஞர்களைக் கொண்டு, தெய்வ நாயகத்தின் நூல்களை மதிப்பிடச் செய்தார். வந்த பேரறிஞர் கள் அனைவரும் தெய்வநாயகத்தின் சமய வெறி, திருவள் ளுவருக்கு எந்தச் சாயமும் ஏற்றக்கூடாது என்பதில் முடிந்தது. தெய்வநாயகத்தின் கைவந்த கலைகள் அனைத்தையும் புறங்காணச் செய்த பெருமை புலவர் கலைமணிக்கே உண்டு.

“சமயக் கணக்கர் மதிவழி கூறாது தமிழ்ச்சிந்தனையால் உலகு தழுவிய ஒரு தமிழ்ப் பண்புடைச் சான்றோன் திருவள்ளுவச். செம்மல் என்பதை மெய்ப்பிக்கப் பன்மொழிப் புலவர் க. அப்பா துரையாரின் மதிற்மேல் பூனைக் கருத்துக்களையெல்லாம் எதிர்த்துக் கிளப்பிய புயல், கலைமணியின் கருத்தில் தெரித்தது, இன்றும் பட்டம் பகல் போல் கண்முன் நிற்கிறது.

ஒருவருக்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒர் இனத்துக்கோ, ஒர் எல்லைக்கோ உரியவர் அல்லர் திருவள்ளுவர். பூங்குன்றனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒருலகச் சீர்மைக்குப் பேருள உணர்ச்சியை - உண்மையைத் தந்தவர் வள்ளுவர் என்பதை, பலரின் பண்புரைக்கும் உள்ளொளியாய், உயிரொளியாய் இருந்தவர் கலைமணி. அவரின் உள்ளத்தின் ஒளியும், ஒலியும் அய்யன் திருவள்ளுவர் எனும் இந் நூலில் எங்கும் பளிங்கு போல் தெளிவுறக் காணலாம். புலவர் என்.வி.கலைமணியின் சொல் நோக்கும், பொருள் நோக்கும், நடைநோக்கும், தமிழ்த் தொடை நோக்கும் அருமை போக்குடையவை. அதனை இந்நூலிலே நுகரலாம்.

உட்கோட்டம் இல்லாத கருத்துகளுக்கேற்ற சொல்லோட்டம் கொண்டவர் கலைமணி. உரைநடையை யாப்புக்குள் அடக்கிக், கவிதை எழுதும் குழந்தைசாமிகள் இடையில், உரை நடைக் கூத்திலே பாட்டுணர்ச்சியின்அத்தனைப் பாங்கையும் ஒராயிரம்

21