பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


காலால் இடறி விடுகின்ற நேரத்தில், கூட்டமான கடவுள்களும் - குறிப்பிட்ட இடங்களிலே காணப்படுகின்ற திருக்கோயில் களும், காலத்தைப் பார்த்துக் கொண்டேதான் இருந்தன.

குலைந்தான்! அலைந்தான்! குமுறினான்! பதறினான்! நடு நடுங்கினான்! மீண்டும் எழுந்திருப்போமா, நிலத் துரும்பைப் பிடித்து நிற்போமா என்ற அச்சம் - மனிதனுக்கு!

விழுந்த இடம் மரணமா? அல்லது உலகத்தின் துன்பமா? என்ற ஐயம் அவனுக்கு எழுந்து கொண்டே இருந்தது.

இந்த வினாக்களுக்கு அன்று வரை தகுந்த பதில் கிடைக் காமையால், மனித சமுதாயம் விடைதேடி அலைந்து கொண்டே இருந்தது.

அப்போது, அய்யன் திருவள்ளுவர் நெசவுத் தொழிலைச் செய்து கொண்டே, வாழ்க்கையையும் நெய்ய ஆரம்பித்தார்.

மனித வாழ்க்கை, தறியின் பாவைவிட - மிக வேகமாக ஒடுவதைக் கண்டார்.

குளிருக்குப் போர்த்தப்படுகின்ற துணியாக - அது நெய்யப் பட்டால் பரவாயில்லை.

பிணத்தின் மீது மூடப்படுகின்ற சல்லாத் துணியாக - அது மாறி விட்டதை உணர்ந்தார்.

அதனால்தான், அவர் வாழ்க்கையை நெய்ய ஆரம்பித்தார். இல்லையென்றால் - உண்மையைப் பெய்ய ஆரம்பித்தார் என்று காலம் கணிக்கின்றது.

முதன் முதலாக அய்யன் திருவள்ளுவர் எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல், மதத்தின் கூரிய வாள் விழ ஆரம்பித்தது.

அதை மீறித்தான் அவர் சீறி எழுந்தார்: மதத்தின் மாயங்கள், அற்புதங்கள், அவர் முன்பு எரிபட்ட மிளகாயாக மாறின.

அன்றைய சமுதாய வளர்ச்சி, சூழ்நிலைகட்கு ஏற்ப அந்த மிளகாய், நெடியை எழுப்பி, மூச்சைத் திணறடித்ததேயன்றி, வள்ளுவர் பெருமான் நெஞ்சுரத்தின் முன்பு நீண்ட நேரம் நிற்க முடியாப் புகையென ஒடி மறைந்தது!

37