புலவர் என்.வி. கலைமணி
தமிழுக்குள்ள பேராண்மை அவருக்குப் பெரிதும் பயன்பட்டது.
அதனால்தான், எல்லாச் சமயங்களும் - மக்களும் ஒப்பும் வகையில் - அவரால், திருக்குறள் என்ற பொதுமறையை எழுத முடிந்தது. திருக்குறளின் ஒவ்வொரு எழுத்துகளிலும் இருக்கின்ற வீரம், அவரை வாழ்க்கைக் களத்தின் போர் வீரனாகவே மாற்றியிருக்கின்றது.
இல்லாவிட்டால், இத்தனை மதங்களையும் எதிர்த்து - அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் உடன் படத்தக்க வகையில் - ஒரு பொதுமறையை நூலாக எழுதியிருக்க முடியுமா?
மனித வாழ்க்கையெனும் களத்திலே, ஆசாபாசங்கள் என்ற எதிரிகளை அய்யன் திருவள்ளுவர் வினாடிக்கு வினாடி சந்தித்தார்.
ஆழியில் பிசைந்து வைக்கப்பட்ட மண், குயவன் கையால் முழுமை பெறுவதைப் போல, மனிதனுடைய உணர்ச்சிகள் - அவர் எழுதிய தத்துவங்களுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.
அய்யன் திருவள்ளுவரிடமிருந்த பேரறிவு, வானத்தின் வெட்ட வெளியிலே இருந்து அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டதோ, அல்லது தேவதூதன் ஒருவனாலே ஒளியாகக்கருவில் திணிக்கப்பட்டதோ அல்ல!
மதங்களின் அற்புதங்களால் - மனித வயிற்றில் புகுந்த வரலாறுகள், அதை - அப்படியே மக்கள் நம்ப வேண்டும் என்ற மதக் கட்டுப்பாடுகள் - அய்யன் திருவள்ளுவர் பெருமானுக்கு அப்போது இல்லை - அதனால், இப்போதும் - எப்போதும் - இல்லை.
உதிரச் சகதியில், நரம்புப் பந்தரின் கீழ் சூலாகி, கூன் விழுந்த உடலோடு சுருக்கமாகப் பிறந்த ஒரு சாதாரண மனிதர் அவர்! கூன் என்றாலே அறிவுதானே!
அய்யன் திருவள்ளுவருக்குக் கல்வி அறிவைப் புகட்ட, அவரது நாவை நோக்கி எந்தச் சூலமும் வந்ததில்லை.
ஓயாத சிந்தனை! ஓயாத எண்ணச் சூழல்கள்! இவற்றினிடையே சிக்கியவர், 'காலத்தைப் படைப்பவனும் - காலத்-
41