பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்அனைத்து நாடுகளுக்கும் பொதுமறையாகுந் தன்மைத்தென. தனித் தமிழ் மறையாக, நல்லார் பலராலும் நவின்றும், நவில்வித்தும் வருகின்ற உலகறி உண்மை நூல்! ஒழுக்க நூல், ஒழுகலாறுக்குரிய இலக்கண மறை! இதற்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்துறைவதே சமுதாயமாகும்!

கொடுமையான புயலடிக்கின்ற நேரத்தில், கணவனோடு கோபித்துக் கொண்ட பெண்ணொருத்தி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு இருட்டிலே தாய்வீடு செல்வாளானால், அவளைக் காப்பாற்றும் பொறுப்பு இயற்கையிடமே விடப்படுகிறது அல்லவா?

அதனைப் போல, அறிவின்மீது கோபப்பட்டுத் தமிழ்ச் சமுதாயம் தனது மக்களை இருட்டிலே அழைத்துச் செல்லும் போது, அதைக் காப்பாற்றும் பொறுப்பு இயற்கையிடமே விடப்பட்டு விடுகிறது.

விழியைப் பிடுங்கக் கூடாது, வெட்டிக் கிழிக்கும் மின்னல் - வழியைக் காட்ட வேண்டும்.

அய்யன் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், இப்படி ஒடுகிற ஒரு சமுதாயத்தை வழி நடத்துவதற்காக, சில கொடுமையான மின்னல்கள் வீச ஆரம்பித்தன.

அகக் கண்ணையும் - புறக்கண்ணையும் சேர்த்து, அவை குருடாக்கி விட்டன.

நெறிகள் சில நேரத்தில் விழியை ஊதி அணைக்கும் மின்னல்களாகக் கூடத் தோன்றலாம்.

அவர் காலத்தில், ஒன்றிரண்டு இப்படி வழி காட்டத் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னே வந்தன!

எந்த மார்க்கங்கள் அவை? எந்தச் சமயங்கள் அவை? என்பதை, எந்த ஒரு குறளிலும், திருவள்ளுவர் எங்குமே குறிப்பிடவில்லை.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்"

என்ற குறளை அவரே எழுதிவிட்டு, அந்த சமயக் கொடுமை

44