இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலக எட்டாவது
அதிசயத்திற்குக் காணிக்கை!
வடநாட்டின் ஆக்ராநகரில் உள்ள தாஜ்மஹால் என்ற கவினுறும் காதல் மாளிகை உலக ஏழு அதிசயங்களுள் ஒன்றென்று போற்றுகிறது. உலகு - வாழ்த்துகிறது வரலாறு:
தென்னாட்டின் முக்கடல் சூழ்ந்த சங்கம முனையில், கன்னியா குமரி நகரின் கடல் மீது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுப்பப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை உலகின் எட்டாவது அதிசயமாக நிலை பெற்று உள்ளதால், அந்த அய்யன் திருவள்ளுவர் மாணடிக்கு இந்நூலை மாலையாகச் சூட்டி, வணங்குகிறேன்.
வி. அறிஞர் அண்ணா
16.2.2000