இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அய்யன் திருவள்ளுவர்
சுரங்கத்தை, தமிழ் மக்கள் எப்படியெல்லாம்' அனுபவிப்பார்களோ, அது அவரவரது அறிவுக்கு உட்பட்ட கடமையாகும் - உரிமையாகும்!
ஆனால், அந்த மனிதகுல மேதையின் காலடிக்கு, அறம் பழுத்த அவரது குறட்பாவைப் படித்துப் பயன்பெற்று, சிரம் பழுத்த மனிதர்களாக நாம் நடமாடுவதும் ஒன்றுதான்- தமிழினம், அய்யன் திருவள்ளுவருக்கு காட்டும் நன்றியாகும்.
வான் கோள்களைத் துளைக்கும் உலக அறிவு, கலைஞர் அய்யன் என்று பெயர் சூட்டிய திருவள்ளுவனாரின் வாழ்வியல் விஞ்ஞான அறிவை, திருக்குறளை, இந்தியத் தேசிய நூலாக்குமா?
கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த வேண்டுகோளை தில்லி மத்திய அரசு முன்பு வைத்துள்ளார். கண் திறக்குமா - காலம்?
மத்திய அரசு மதிக்குமா? - பார்ப்போமே!
48