பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


வெள்ளையன் பக்கத்திலே இருக்கின்ற சொர்க்கம் - அவன் கண்கட்கு இலையுதிர் காலமாகவே தெரிந்தது.

கீழை நாட்டுத் தத்துவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தியடிகள், மேலைநாட்டுத் தத்துவத்தில் புதைந்திருக்கும் பூதாகார உருவத்தைக் கற்பனை செய்ய முடியாத ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக் களித்தார்.

அதனால், தென்னாப்பிரிக்காவில் அவர் மனித உரிமைக்காகத் தன்னுடைய போராட்டத்தைத் துவக்கினார்.

கருப்பு மனிதனுக்கு வீரமுண்டா? இது வெள்ளையன் அன்று கேட்ட அகந்தைக் கேள்வி.

வீரமுண்டு என்பதனை காந்தி பெருமான், தமது அறம் சார்ந்த அகிம்சை செயல்களால் நிலை நிறுத்திக் காட்டினார்.

இல்லையென்றால், தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் பதினொன்று முறை சிறை சென்று, ஆறு ஆண்டுகள் பத்துத் திங்கள்கள் சிறையில் இருந்திருக்க முடியுமா?

காராக்கிரகத்தில் காலம் தள்ளிய அவரது சிறை வாழ்வுக்கு என்ன பொருள்? சிறையில் இருந்தாலும், வெளியே நடமாடினாலும், நான் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் எறும்பாகவே உழைப்பேன் என்பதல்லவா?

காந்தியடிகள் 'நைடதம்' என்ற நூலில் வரும் மன்னன் நளனைப் போல சமையல் பணியாளராக இருந்தார்.

இத்தாலி நாட்டு, நோயாளிகளது சிகைகளை காந்தியண்ணல் சிங்காரம் செய்தார். தனக்குத் தானே முடி வெட்டிக் கொண்டார். சிறையிலே தன்னுடன் இருந்தவர்களுக்கும் முடி வெட்டினார்.

கூலி வாங்கும் அளவும் நில்லாய் நெடுஞ்சுவரே என்று பாடிய கம்பர் பெருமானைப் போல, கூலிக்காரனாகவும் வேலை செய்தார்.

'ஒரு கடப்பாரையைக் கொடுங்கள் உலகக் கோலத்தின் இருசை மாற்றிக் காட்டுகிறேன் என்று, உலகப் போர் மூலம்

51