பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


ஒன்றாகவே எடை போடுகிறான்.

படித்தவனின் உணர்ச்சியையும் - பாமரனின் திகிலையும் ஒரே ஒசையில் இழைத்துக் கேட்டு காந்தியடிகள் பழகினார்.

இந்த இருவர் உடைகளை, இவர்கள் இரண்டு பேர்களில் எவன் ஒருவன் தயாரித்தானோ, அவனாலேயே அதைப் பறிக்க முடியாது என்ற ஆவேசம், காந்தியடிகளின் பரம்பரைச் சொத்தாக இருந்தது.

நான் தனித்துப் பிறந்தேன்.

என் உயிர் தானாகவே போகிறது.

ஆனால், உரிமை மட்டும் எனக்குப் பிச்சையாக வரக் கூடாது.காற்றைத் தடை செய்ய முடியாது.

ஒளியை வழி மறிக்க இயலாது. ஆனால், உரிமையின் குறுக்கே மட்டும் செங்கோல் நிற்பதா?

எனது சுதந்திர ஆசைகள் ஒழுக்கத்தின் வேலிக்குள் இருப்பதா?

எனது உணர்ச்சிகள் கட்டுக்குள் அடங்கிக் காலம் எல்லாம் வாழ்வதா?

எனது உரிமைகளும் ஆசைகளும் உணர்வுகளும் என் வாழ்க்கையில் இருக்க வேண்டாமா?

வாழ மட்டும் எனக்கு அனுமதி அளித்த ஆண்டவன் உரிமையை மட்டும் இங்கிலாந்து நோக்கி அனுப்பிட அவன் என்ன முட்டாளா?

அதோ, வேலி ஓரம் பூத்திருக்கும் பூ என் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.

அதோ, ஏற்றமடித்துப் பாடுகிறானே பாட்டு அது என் காதுக்கு அருகேயே கேட்கிறது.

அதோ, ஏற்றம் இறைக்கும் சாலில் அள்ளி மொண்டு கீழே சாய்த்தானே தண்ணீர், அது என் விழி வாசலுக்கு முன்னாலேயே ஓடுகின்றது.

ஆனால், எனது உரிமையை எவனோ கொடுத்து வாங்குகின்ற, கிடைக்க முடியாத பொருளாகப் படைத்துவிட்டு

59