புலவர் என்.வி. கலைமணி
சிந்துக்குத் தந்தையே!
சிங்காரச் சந்தமே !
நீர் தந்த தெங்கிள
நீர் சுவைப் பாடல்கள்
எமைவிட்டுப் போனாலும்,
உமை விட்டு நீங்காத
உள்ளங்கள் கோடி உண்டு!
பாவேந்தே ! உம்மால் உருவானோம் -
தமிழ் உணர்வு பெற !
உமை நினைத்து உருகுகின்றோம் -
கண்ணாரம் சுழலக் - கழல !
குயில் பாடும் இடத்தில் -
கோழிகளும் வந்ததுண்டோ ! தமிழ் பாடும் உமது இடத்தில்
தமிழ்த் துரோகிகளும் வரலாமோ!
விபத்துக்கு இதை விட ஒரு
விளக்கம் தேவையா?
உருண்ட சந்திரனின் உருவத் திரள் கண்டு-
மருண்ட மனிதர்கள், பாவேந்தர் காலத்திலேயே
நடமாடிய வடமொழி வருடிகள்!
எட்டிக் கொட்டையிலே இறக்கிய சாறு
அவர்களது பேச்சுக்கள் - எண்ணங்கள்!
அந்தக் கந்தல் துணிகள் எல்லாம், இன்று -
கன்னித் தமிழுக்கு நானென்று,
அரசியல் பேன் பிடித்த
தலைகளுடன் பேசுகின்றனவே - ஐயா !
பாரதிதாசனே !
‘பா’ திறத்து ஆசானே !
சீர்பூத்த தமிழே !
தமிழ்க் கரும்பே !
கவிதைத் தேனே !
இலக்கியப் பாகே !
கவிஞர் குலத் தலைவா !
75