அய்யன் திருவள்ளுவர்
கூர் பூத்த பாடல் மொட்டே !
தமிழ் மலர்க் கையே !
பேர் பூத்த புகழே !
தமிழ்ப் பேழையே !
உனது வாழ்நாள்
பரிதியில் எழுதப்பட்ட
ஒளிர்க்கற்றை !
நீர் வடித்த நெருப்புக் கவிதைகளை
உலகத்தின் இருப்பாக வைத்துள்ளீர்!
ஆண்டுகள் வரும்!
ஒவ்வொரு ஆண்டும்
உமை நினைந்து ஒடும் !
நகரும் அந்த நாட்களில் - எங்கள்
தமிழ் நெஞ்சங்கள் -
உம் நினைவோடு நகரும்.
ஐயா! கவிஞ்ரய்யா !, நீர் -
ஒரே தடவையாகப் பிறந்தவர்!
அதனால் ஒரே தடவையாக இறந்தவர்:
தமிழ்த் துரோகிகள் சிலர்,
இங்கே பல முறைகள் இறந்து - பிறந்து
கொள்ளிச் சட்டிக்குப் பின்னாலே
பல தடவை போகிறார்கள்!
அவர்களை எல்லாம் நினைக்கும்போது,
பாவேந்தர் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டாமோ!
காலத்தின் அவசரத்தால்
கரை கடந்து சென்று விட்டாரே !
காட்டிய கோலம் போதுமென்று,
பூட்டிய சிறைக்குள் போய் ஒடுங்கி விட்டாரோ !
இந்த நாளில், உமை நினைந்து
நினைந்துக் கூவியழ, -
எனது கட்டுரை ஒன்றால்தான் முடியும்!
எனது கண்ணிர் அருவி யாகின்றது!
இயற்கையின் செறிவெல்லாம்
இனிதாக நிறைந்தவரே !
‘பா’ புரட்சிக்குப் பர பிரம்மமே !
கெஞ்சுகின்ற என் நெஞ்சப் புலம்பலுக்கு,
எதோ ஒரு கவிதைக் கொடு!
76