பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அபராதம் பத்து டாலர் என்றது சட்டம். இந்த நிகழ்ச்சி கறுப்பர் இனத்தை விழிக்க வைத்தது. அணி திரண்டு எதிர்த்தது கறுப்பர் இனம்.

இந்த கறுப்பர் சங்கத்துக்குத்தான் தலைவர் பொறுப்பை ஏற்றுப் போராடினார் மார்ட்டின் லூதர்கிங்!

இவ்வாறு, கருப்பான ஒன்று கட்டாயம் அவமதிக்கப்பட வேண்டிய ஒன்று என்றால், அழிக்கப்பட வேண்டியது என்றால், எத்தனை வெள்ளைக்காரர்கள் தங்களது கண்களிலுள்ள கருமணியை அழிக்கத் தயாராக இருக்கிறார்களோ?

சூரிய வெளிச்சத்தால் சுடர் விடுகின்ற மனித முகத்திற்குப் பொலிவைத் தருவது, கடுமையான இருளில் நொடிக்கு நொடி துடித்துக் கொண்டிருக்கின்ற இதயம்தான் ரத்தத்தைக் கொடுக்கின்றது.

இருளிலே வாடுகின்ற இதயம் இல்லாவிட்டால், வெளிச்சத்திலே இருக்கின்ற தேகம், அழகோடு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முடியாது.

கருப்பையின் இருளிலே உதயமான வெள்ளைக்காரன் - எப்படி இருளை வெறுக்கின்றான்? நம்மாலே அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த வினாக்கள் அத்தனையும் - மார்ட்டின் லூதர் கிங்கின் கேள்விகளாகும். சிந்தனைகளின் சுழற்சியாகும்!

என்றைய தினம் கிங் நீக்ரோ இனத்திற்குத் தொண்டாற்றப் புறப்பட்டாரோ, அன்றைய தினம் முதலே மரணம் அவரைப் பின் தொடர்ந்து கொண்டே வந்தது.

காற்றின் அழுத்தம் குறைந்த இடத்தில், காற்று எப்படி ஓடி வந்து அந்த இடத்தை நிரப்புகின்றதோ - அதனைப் போல, கறுப்பர்கள் என்ற காரணம் காட்டி அவர்கள் வேதனைப்படுகின்ற நேரத்தில், மார்ட்டின் லூதர் கிங் விரைந்தோடி வந்தார்.

அவர் இரக்கத்தின் சாட்சியாக, நின்றபோதெல்லாம் - அறியாமை இருளில், பண்பாடற்ற கருமையில் வாடியிருக்கின்ற அமெரிக்க வெள்ளைக்காரர்கள், அவரை எதிர்க்க ஆரம்பித்

80