உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


காதல் அனுபவம் ஒன்றுதான்!
கல்லறை இருளும் ஒன்றுதான்!
உயிரின் எடையும் ஒன்றுதான்!
இருப்பினும் என்னை, ஏன் அடிமை
என்று அவன் அழைக்கவேண்டும்?

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்,1862-ம் ஆண்டிலேயே அடிமைகளுக்கு விடுதலை அளித்துப் பிரகடனம் செய்தார்.

1927-ம் ஆண்டில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் சியர்ராலி யோனில் என்ற ஊரில், அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

நீக்ரோ, இனத்தின் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகுமா நான் அடிமை? என்ன நியாயம் இது?

நான் ஏன் வெள்ளையனை, எசமான் என்று கை கூப்ப வேண்டும்? இது தன்னையறிந்த இதயம் தந்த பாடம்- கிங்குக்கு!

அதனால் அறப்போர்க் களம் கண்டார். வேகமான நீக்ரோ மக்கள் திரள் திரளாய் அவரைப் பின் தொடரலாயினர்.

வெற்றி பல கண்டார்! வெள்ளையனின் நிமிர்ந்த தலை, குனிய ஆரம்பித்தது. நீக்ரோ இனம் விழித்தது.

நிறவெறி, இனி நேரடிப் போராட்டத்தில் இயங்கத் தயக்கப்பட்டது- வெட்கப்பட்டது!

அதன் எதிரொலி, சதித்திட்டம் என்ற சிலந்திக் கூட்டைப் பின்ன ஆரம்பித்தது.

இது போன்ற சிலந்திக்கூடுகள் - முன்பொரு தடவை அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும் - இராபர்ட் கென்னடிக்கும் பின்னப்பட்டன.

இப்போது மார்டின் லூதர் கிங்குக்கும் அதே சிலந்தி வலை விரிக்கப்பட்டது.

நகர சுத்தித் தொழிலாளர்கள் நடத்தும் அறப்போரைத் தலைமையேற்று நடத்திய மார்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

83