அய்யன் திருவள்ளுவர்
அவர் சாவதற்குச் சில நொடிகளுக்கு முன்னால் கூட, தன்னைச் சந்திக்க வந்த பாதிரிமார்களை, 'தெய்வமப் பாசுரம் பாடுங்கள்' என்று இதயம் கனியக் கனியக் கேட்டுக் கொண்டார்.
ஆபிரகாம் விங்கன் இதயத்தைப் பிளந்த துப்பாக்கி - கென்னடியைச் சின்னா பின்னமாக்கிய துப்பாக்கி, அதோ, கிங்குக்கும் பின்னாலே நீட்டிக் கொண்டிருந்தது.
உலக சமாதானத்திற்காகவும் - எடுப்பாரற்ற பிள்ளகளாக இருப்பவர்களுக்காகவும் - எந்த நேரமும் சிந்திக்கும் சிந்தனைக் கூடமாக விளங்கும் - அவரது தலைப்பகுதியை நோக்கி, துப்பாக்கிக் குண்டுகள் ஓடி வந்தன.
உறுதியான லட்சியங்களால், கொள்கைகளால் உரமேறிய அவரது தலையை நம்பி - உன்மத்தன் ஒருவன் உருவிவிட்ட குண்டு மேலே செல்ல முடியாமல் தங்கி விடுகின்றது.
பசி தீர்க்கும் வாழைக் குலை
கீழே சாய்வதைப் போல,
பனி மலர் அவிழ்ந்த மணக்கும்
கருத்துடையான் மார்ட்டின் லூதர் கிங் என்ற
மனித நேய மேதை, நிலமிசை துவண்டு வீழ்ந்தார்.
நிலா நழுவிற்றோ!
நித்திலம் உதிர்ந்ததோ?
மான் ஒன்று கீழே மாய்ந்ததோ?
மாணிக்கம் சிதறிற்றோ?
தேன்குடம் சாய்ந்ததோ?
தென் பாங்கு சோர்ந்ததோ?
என்ற நிலையில், அமெரிக்கக் காந்தி என்று போற்றப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் மக்களை விட்டுக் காலத்தோடு கலந்தார்.
வளைந்து கொண்டே தேம்பி அழும் வானம், இனி நிமிர்ந்து நிற்க எத்தனை காலம் ஆகுமோ?
84