உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


உலக உத்தமர்கள் இப்படி அடிக்கடித் துப்பாக்கிக் குண்டுகளால் இறப்பதால்தான், வளைந்தது போன்ற இந்த வானம் இன்றுவரை நிமிராமல் போயிற்றோ?

பாசி பிடித்த சமுதாயம் - பதம் குலைந்த சோற்றைப் போல யாருக்கும் பயன்படாமல் போவதற்குக் காரணம் என்ன? மக்கள் தொண்டர்கள் பலியாவதால்தானோ?

அறிஞர்களைக் கொல்லுவதால், உத்தமர்கள் உயிர்களைப் பறிப்பதால் - நல்லவர்களை நசுக்குவதால்தான்! என்பது இப்போது புரிகிறது.

துப்பாக்கி ஏந்திய இந்தக் குணங்கெட்ட பாவிகள், குழந்தையிலே எப்படிச் சிரித்தார்கள்? எவ்வாறெல்லாம் நடித்தார்கள்?

அந்த மனித நேய துரோகிகள் பேசிய மொழியைக்கூட மழலை என்று கூறுகின்றார்களே சில மேதைகள்,

பிற்காலத்தில் கொலைகாரனாக மாறக்கூடியவன் -
ஆபிரகாம் லிங்கனைக் கொல்லக்கூடியவன் -
இராபர்ட் கென்னடியை வீழ்த்தக் கூடியவன் -
மார்டின் லூதர் கிங்கைச் சாகடிக்கக் கூடியவன் -
மகாத்மா காந்தியைச் சுட்டு மாய்க்கக் கூடியவன்-
இந்திரா காந்தியை துப்பாக்கியால் படுகொலை புரியக் கூடியவன் -
இராஜீவ் காந்தியை மனித வெடி குண்டால் குலைக்கக் கூடியவள் -

சிறு வயதில் வெட்டுக் கிளியைப் போலத்தான் தத்தித் தத்தி ஓடியிருப்பார்களோ! அடப் பாவிகளே!

அவரவர்கள் நடையழகைப் பார்த்து- அவரவர்களைப் பெற்ற தாய்ப் பால் சுரக்கப் பூரித்திருப்பாள் அல்லவா?

ஆனால், அவர்கள்தான் பிற்காலத்தில் அறிஞர்குலத் துரோகிகள்! அறிவின் கொலைகாரர்கள்! அவனியின் கரும் புள்ளிகளாக! - ஆனார்கள்! இல்லையா?

85